Saturday, May 3, 2014

காணிப் பிணக்கு காரணமாக இடை நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு : பாராளுமன்ற உறுப்பினர் முருகேச சந்திரகுமார் நடவடிக்கை!

Saturday, May 03, 2014
இலங்கை::
கிளிநொச்சி இரத்தினபுரத்தில் காணிப் பிணக்கு காரணமாக இடை நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஈ,பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேச சந்திரகுமார் அவர்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.
 
இரத்தினபுரம் பகுதியில் இந்திய வீட்டுத் திட்டத்திற்கமைவாக சுமார் 124 வீடுகளை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அப்பகுதியில் சுமார் 49 வரையான குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை இடைநிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. குறித்த 49 குடும்பங்களும் அரச ஒதுக்கீட்டுக்காணிகளில் குடியிருந்தார்கள் என்ற நோக்கின் அடிப்படையிலேயே வீட்டுத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டது.
 
இவ்விடயம் மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களின்
கவனத்திற்கு கொண்டுவரப் பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு இன்று (02.05.2014) விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அம்மக்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அக்காணிகளில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு அங்கேயே இருப்பிடங்கள் அமைப்பதற்குரிய காணிகள் வழங்கப்பட வேண்டும்  என்ற கொள்கைக்கமைவாக குறித்த காணிகளை நில அளவைத் திணைக்களத்தினூடாக அளவீடு செய்து நீர்ப்பாசணத் திணைக்களத்தின் கால் வாய்க்குத் தேவையான பகுதியை உரிய பொறியலாளர்களின் கோரிக்கைக்கேற்ப ஒதுக்கீடு செய்து வழங்கியதுடன் ஏனைய காணிகளில் மக்கள் வீடுகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அரச நிர்வாக விதிமுறைகளுக்கமைவாக மேற்கொண்டார்.
 
இதேவேளை திருவையாறு வில்சன் வீதிப் பகுதியிலும் சில குடும்பங்கள் எதிர்கொண்ட காணிப்பிணக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் இன்று உரிய முறைப்படி தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
 
இதன்போது ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் சுதாகரன் நீர்ப்பாசனப் பொறியியலாளர் விகிர்தன் கரைச்சி பிரதேச செயலக காணி அலுவலர் சிவகுமார்  மற்றும் நில அளவைத்திணைக்களத்தின் அதிகாரிகள் கரைச்சி பிரதேச செயலகத்தின் குடியேற்ற உத்தியோகத்தர் குறித்த கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் எனப்பலரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment