Sunday, May, 04, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களின் குடி நீர் தேவைகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக குடிநீர் இணைப்புகளை பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மீள்குடியேற்ற அமைச்சு இதற்காக முதல் கட்டமாக இருபது இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளதாகவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அதன் உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இது தொடர்பான நிகழ்வு வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகங்களில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரிம பத்திரங்களை வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,பிரதேச செயலாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment