Sunday, May, 04, 2014
மதுரை::மதுரையில் பெறப்பட்ட போலி பாஸ்போர்ட் மூலம் அமெரிக்கா செல்ல
முயன்ற இலங்கைக்காரரை, டில்லி விமான நிலையத்தில் சி.பி.ஐ.,யினர் கைது
செய்தனர்.
இலங்கையை சேர்ந்தவர் ஜேசுதாஸ் மகன் சாம்சன்,
31. வியாபாரியான இவர், சென்னையில் வசித்து வந்தார். மதுரை பாஸ்போர்ட்
அலுவலகத்தில் போலி ஆவணங்களை கொடுத்து பாஸ்போர்ட் பெற்றார். பின்,
அமெரிக்காவிற்கு செல்வதற்காக ஏப்.,29ல் டில்லி விமான நிலையம் சென்றார்.
இத்தகவல் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தெரிந்தது. டில்லி விமான நிலையத்தில்
சாம்சனை சி.பி.ஐ.,யினர் ஏப்.,29ல் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி
பாஸ்போர்ட்,
இலங்கையில் பெறப்பட்ட மற்றொரு பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள்
பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில்
நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, 15 நாட்கள் ரிமாண்ட் செய்து நீதிபதி
கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து சாம்சன் மதுரை மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.

No comments:
Post a Comment