Friday, May 2, 2014

சென்னை ராயப்பேட்டை வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Friday, May 02, 2014
சென்னை::சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று கவுக்காத்தி எஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வெடித்தது. இதில் ஸ்வாதி என்ற இளம்பெண் பலியாகினார். மேலும், 14 பேர் பலியாகினர். சென்னையில் இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் வணிக வளாகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனடியாக செயலிழக்கச் செய்யப்படும் என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்னர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment