Wednesday, May 28, 2014

இலங்கை கண்டியைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர் உசேனின் கூட்டாளி முகமது உசேனி மலேசியாவில் கைது!

Wednesday, May 28, 2014
சென்னை::சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 29ஜஆம் தேதி இலங்கை கண்டியைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர் உசேனை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
 
அவரிடமிருந்து கள்ளநோட்டுகள், சேட்டிலைட் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அமெரிக்க துணைத் தூதரகம், இஸ்ரேல் துணைத் தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினம் கடற்படைத் தளங்கள் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் <டுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
 
அந்த புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமீர் ஜூபைர் சித்திக், பாஸ் என்கிற ஷா ஆகியோரிடம் வழங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், ஷா மீது வழக்குப் பதியப்பட்டது.
 
மேலும் 2 பேர் ஊடுருவல்: இதற்கிடையே உசேன் தனது வாக்குமூலத்தில், மேலும் 2 பேருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாகவும், அவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்து இருந்தார்.
 
உசேன் கொடுத்த தகவலின் அடிப்படையில், கள்ளநோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் வேலை செய்ததாக மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் சிவபாலன், மண்ணடியைச் சேர்ந்த முகம்மது சலீம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.2.50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
இந்த விசாரணைக்குப் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உசேனை மே.27 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் ஜாகீர் உசேனுடன் தொடர்புடையவர்கள் குறித்து  போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
 
இந்நிலையில் மலேசியாவில் ஜாகீர் உசேனின் கூட்டாளி முகமது உசேனி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த கியூ பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். முகமது உசேனியின் பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். மேலும் பிடியாணை வழங்க கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment