Friday, May 2, 2014

குண்டுவெடிப்பில் தொடர்பு? பாக். உளவாளி உசேனின் கூட்டாளிகள் 2 பேர் கைது ரூ 2.5 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்!

Friday, May 02, 2014
சென்னை::பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி முகமது ஜாகீர் உசேன் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
சென்னையில் ஊடுருவிய பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளியும் இலங்கை தமிழருமான முகமது ஜாகீர் உசேன் (37) கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் சென்னை நகரை தகர்க்க பயங்கர சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. ரகசிய இடத்தில் வைத்து அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதில், பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
 
இந்நிலையில், ஜாகீரின் கூட்டாளியான இலங்கையை சேர்ந்த சிவபாலன் (39) என்பவரை நேற்றிரவு கியூ பிரிவு போலீசார் தி.நகரில் சுற்றி வளைத்தனர். மற்றொரு கூட்டாளியான ராயபுரத்தை சேர்ந்த முகமது சலீம் (37) என்பவரையும் போலீசார் பிடித்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கள்ள நோட்டு பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கும் சென்னையில் வெடித்த இரட்டை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment