Tuesday, April 1, 2014

ஆட்கடத்தலைத் தடுப்பதற்காக இலங்கைக்கு ரோந்துப் படகு; ஆஸ்திரேலியா வழங்கி உதவுகிறது!

Tuesday, April 01, 2014
இலங்கை::இந்து மகா சமுத்திரத்தில் ஆட்கடத்தலைத் தடுப்பது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படை ஈடுபடுவதற்கு உதவும் விதத்தில் விரிகுடா வகுப்பு ரோந்துப் படகு ஒன்றை ஆஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த ரகத்தில் ஆஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கும் இரண்டு படகுகளில் முதலாவது படகைக் கடந்த சனியன்று ஆஸ்திரேலியாவில் வைத்து பொறுப்பேற்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வில் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கலந்து கொண்டார்.
 
முன்னர் ஆஸ்திரேலிய சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படகாக இது பயன்பட்டு வந்தது. அதனையே ஆஸ்திரேலியா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றது. கடந்த நவம்பரில் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்குபற்றுவதற்காக இங்கு வந்திருந்த ஆஸ்திரேலியப் பிரதமர் ரொனி அபேர்ட், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆட்கடத்தலை இலங்கை தடுக்கும் விதத்தில் இத்தகைய இரண்டு படகுகளை ஆஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கும் என அறிவித்திருந்தார். அதில் ஒன்றே இப்போது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment