இலங்கை::இலங்கையில் பௌத்த தேரர்களுக்குச் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பௌத்த தேரர்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் தரமுடியாது என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்ததை அடுத்து, மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் முடிவு தவறு. அதனை நீக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மூன்று பேர் மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
வண. கலாநிதி பரவாகர விமலவன்ஸ, வண. பொத்தேகம சீலவிமல, வண. பியகம சோமரட்ண அகியோரே இந்த வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில், இலங்கை அரசமைப்பில் பௌத்தத்தைப் பேணவேண்டும் என்று உள்ளது. இந்த நிலையில் நீதிமன்றுக்கும் அதனைப் பேண வேண்டிய கடப்பாடு உள்ளது என்று தெரிவித்து அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment