Sunday, March 30, 2014
சென்னை::அமெரிக்காவின் பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்திய மத்திய அரசாங்கம் புறக்கணித்திருந்தமை தொடர்பில் மத்திய நிதி அமைச்சர் பி.சிதம்பரம் வெளியிட்டிருந்த கருத்தை, இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்த்துள்ளது.
அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்திய ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிஷேக் சிங்கீ, அரசாங்கத்தில் இருந்துக் கொண்டே பி.சிதம்பரம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தாலும், காங்கிரஸ் அதனை ஏற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஏனைய விடயங்களைப் போல இலங்கை விடயத்தையும் தேசிய நோக்கத்திலேயே அணுகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment