Sunday, March 30, 2014
இலங்கை::தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற தென் மாகாணசபைத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
தென் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போனஸ் ஆசனங்களுடன் 33 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 14 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜே.வி.பி ஐந்து ஆசனங்களையும், ஜனநாயகக் கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மாத்தறை மாவட்டத்தில் 293619 வாக்குகளுடன், 13 ஆசனங்களையும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 174687 வாக்குகளுடன், 8 ஆசனங்களையும், காலி மாவட்டத்தில் 231102 வாக்குகளுடன், 13 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment