Monday, February 03, 2014
சென்னை:தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 30ம் தேதி தொடங்கியது. கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது, அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன், திமுக தலைவரை விமர்சித்து பேசினார். இதனால் நடந்த அமளியை அடுத்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அப்போது கவர்னர் உரையை கிழித்தெறிந்த திமுக எம்எல்ஏ சிவசங்கர் தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் இந்த தொடர் முழுவதும் சட்டசபையை புறக்கணிப்பார்கள் என திமுக சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அதன்படி, சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்றும் திமுக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். அதேபோல் சட்டப்பேரவையை குறைந்த நாட்கள் மட்டுமே நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேமுதிக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்து வருகின்றனர்.
இன்றும் அவர்கள் அவைக்கு வரவில்லை. மேலும், மக்கள் பிரச்னை பற்றி அவையில் பேச முடியவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசினால் மட்டுமே அவைக்குறிப்பில் ஏறுகிறது. ஆளுநர் உரையிலும் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை என கூறி புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏக்களும் அவையை இன்று புறக்கணித்தனர்.
No comments:
Post a Comment