Monday, February 3, 2014

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Monday, February 03, 2014
இலங்கை::
இந்திய வீட்டுத் திட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்து வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
 
வவுனியா காமினி சிங்கள மஹா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி மன்னார்- வவுனியா வீதி ஊடாக வவுனியா கச்சேரியினை சென்றடைந்தது.
 
பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன்,அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நன்றி தெரிவிப்பதைப் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை சுமந்து சென்றதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
 
அதன்பின் இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குரஷித், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ச.மோகநாதனிடம் மகஜரொன்றை ஆர்ப்பாட்டக்கார்ரகள் கையளித்தனர்.

No comments:

Post a Comment