Monday, February 03, 2014
தூத்துக்குடி::இலங்கை ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம்
மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தனர்.
அவர்களை அமைச்சர்கள் ஜெயபால், சண்முகநாதன் வரவேற்று,அவர்களது சொந்த
ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள்
15 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்று, அந்நாட்டின் புத்தளம் கோர்ட்டில்
ஆஜர்படுத்தி, நீர் கொழும்பு சிறையில் அடைத்தது. இரு நாட்டு
மீனவப்பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், 15 மீனவர்களும்
நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள், கடலோர காவல்படை
"நாயகிதேவி' என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். நேற்று
காலை 7:00 மணிக்கு புதிய துறைமுகத்திற்கு வந்த அவர்களை, தமிழக மீன்
வளத்துறை அமைச்சர் ஜெயபால், சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன்
வரவேற்றனர்.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில்," எங்களை கைது செய்த பின், இலங்கையில் துன்புறுத்தவில்லை. நன்கு கவனித்து கொண்டனர். புத்தளம் கோர்ட்டில் ஆஜர் செய்து, நீர் கொழும்பு ஜெயிலில் அடைத்தனர். தமிழக அரசின் முயற்சியால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்களில் விஜயன்,40,
சித்திக்அலி,35, ராஜேந்திரன்,49, மண்டபத்தை சேர்ந்த ரவிசங்கர்,38, சீனிநூர்
முகமது,46, கிளிண்டஸ், 28, யாசுதீன்,28, நாகூர் கண்ணன்,26, முருகன்,24,
முத்துமணி, 23, சபியுல்லாகான், 34 ஆகியோர் பாம்பனைச் சேர்ந்தவர்கள்.
நோபத்,35, தங்கச்சி மடத்தையும், ரசூல்மைதீன்,27, வாஹித்,56,
உச்சிப்புளியையும், உபகாரன்,42, முத்துப்பேட்டையையும் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment