Sunday, February 02, 2014
இலங்கை::நேபாள இராணுவத்தின் பிரதம அதிகாரி ஜெனரல் கௌரவ் ஷம்ஷர் ஜங் பகதூர் ராணா (General Gaurav Shumsher Jung Bahadur Rana) தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் இன்று யாழ். குடாநாட்டிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இன்று முற்பகல் கொழும்பிலிருந்து உலங்குவானூர்தி மூலம் பலாலி விமான நிலையத்தினை சென்றடைந்த நேபாள இராணுவ உயர்மட்டக் குழுவினருக்கு இராணுவத்தினரால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாளக் குழுவினரை யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தலைமையிலான குழுவினர் பலாலி இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
நல்லூர் ஆலயம் மற்றும் யாழ். கோட்டைப் பகுதிக்கும் குறித்த குழுவினர் பயணம் மேற்கொண்டிருந்தனர். நேபாள இராணுவ பிரதம அதிகாரியின் இலங்கைக்கான இரண்டாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment