Saturday, February 1, 2014

யாழ்ப்பாணத்தில் முதலாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு துளசி மஹால் திறக்கப்பட்டது!

Saturday, February 01, 2014
இலங்கை::நேற்று முதலாவது சொகுசு அடுக்குமாடி வளாகம் வைபவரீதியாக புகழ்பெற்ற வர்த்தக தலைவர் தேசமான்ய கென் பாலேந்திரா அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், உயர் வர்த்தக தலைவர்கள் வெளிநாட்டு பிரமுகர்கள் மதத்தலைவர்கள் கலந்துக்கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தவர்கள், கொழும்பிலிருந்து விசேட தனி விமானத்தின் மூலம் யாழ்ப்பாண நகரத்தை மகிழ்வித்த வண்ணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்து இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

துளசி மஹால் 6 அடுக்குமாடிகளை கொண்ட பரந்த சௌகரியமான ஒவ்வொரு குடியிருப்பிலும் 2 படுக்கையறைகளை கொண்ட மொத்தமாக 36 குடியிருப்பு அடங்கிய ஒரு செயற்திட்டமாகும். இக்குடியிருப்பு யு9 வீதி கச்சேரிக்கு அண்மையில் அமைந்துள்ளதோடு புலம்பெயர்ந்தோரின் கவனத்தையும் அதிகமாக ஈர்த்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் தாம் பிறந்த சொந்த மண்ணில் வீடொன்றை நிர்மாணிப்பதே கனவாகும். வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தை அனுபவித்து, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வாழக்கூடிய ஒரு ஓய்வில்லமாக துளசி மஹால் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொருளாதார ரீதியாக அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு நகரமாகும். இச்சூழல் வணிக ரீதியாக எதிர்காலத்தில் பல வகையான வியாபார வர்த்தக முன்னோடிகள் ஒன்றினையும் ஒரு வசதியான சொகுசு வாழ்க்கையை அனுபவிக்ககூடிய குடாவாக மாறும் என்பதில் ஐயமில்லை. எனவேதான் பல பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு வியாபாரிகளும் அவர்களின் சேவையை விஸ்தரிக்க துளசி மஹாலில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தேசமான்ய கென் பாலேந்திரா உரையாற்றும் போது “ஒரு நகரம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும்போது, துளசி மஹால் போன்ற தனியார் அபிவிருத்தி திட்ட நிறுவனங்கள் முதலீடு செய்வது ஒரு அரிய வரப்பிரசாதமே. மேலும், நவீன குடியிருப்புகளுக்கான கேள்வி யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதென தெளிவாக தென்படுகின்றது.

ஏனெனில் 75% வீதமாக அடுக்குமாடி குடியிருப்புகள் வந்துள்ளமையே. இதில் நாட்டின் எல்லா பாகங்களிலிருந்தும், வெவ்வேறான மதத்தவர்களும் கொள்வனவு செய்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்திட்டமானது Sanken நிறுவனம் வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்டு Peninsular Development ஆல் அபிவிருத்தி செய்யப்பட்டது.”

வரவேற்புரை ஆற்றிய Peninsular Property Developers (Pvt) Ltd இன் தலைவர் திரு. ஆசிர்வாதம் குறிப்பிடுகையில், “இவ்வடுக்குமாடி குடியிருப்பானது, 360 டிகிரி அளவைக்கொண்ட பச்சை பசுமையான இயற்கை அழகை இரசிக்க கூடிய இடத்தில் அமைந்திருப்பது ஒரு வரப்பிரசாதமே. இந்நிறுவனத்தின் முதலாவது வடக்கு மாகாணத்திற்கான ரூபா.500 மில்லியன் பெறுமதி வாய்ந்த முதன்மை திட்டமாகும்.

Sanken நிறுவனமானது இலங்கையில் கட்டிட கட்டுமானத்தில் அதிக நன்மதிப்பிற்குரிய விருதுகளை வென்ற நிறுவனமாகும். இந்நிகழ்வில் Kenya, Quater, India, Australia மற்றும் நேற New Zealand போன்ற நாடுகளும் கட்டிட நிர்மாண துறையில் பல மாற்றங்களை அறிமுகம் செய்தது குறிப்பிடதக்க விடயமாகும். மேலும் யாழ்ப்பாணத்தில் சொகுசு அடுக்குமாடி திட்டத்தை அறிமுகம் செய்ததில் நாம் பெருமையடைகின்றோம்” என்றார்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத சந்தர்ப்பத்தில், குறிப்பிட்ட நேரத்தில் நேர்த்தியோடு கூடிய தரமான குடியிருப்புகளை அதிநவீன வசதியுடன் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி செய்வதையொட்டி நாம் பெருமையடைகின்றோம் என்று Sanken Group இன் தலைவர் திரு.மகேன் வீரசேகர தெரிவித்தார்.

புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் சுனித் மோடித் அவர்களினால் ஒவ்வொரு அடுக்குமாடியும் தனித்துவமாகவும் வேறுபட்ட பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வடிவமைப்பு அனைவரையும் உருவாக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2 Bedroom two Key என்ற தொனிப்பொருளுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட முதலாவது திட்டம் துளசி மஹால் மட்டுமே. ஒரு அடுக்குமாடி வளாகத்தில் 36 குடியிருப்புகளுடன் 15 பேர் செல்லக்கூடிய 2 சொகுசு லிப்ட் வசதிகளும் அடங்கியுள்ளன. ஒரு மாடி குடியிருப்பு வளாகத்தில் மட்டுமே உணவகம், சலவை வசதி, பிரத்தியேக மின் ஆக்கி (Generator) CCTV மற்றும் எந்நேரமும் சேவையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் போன்ற விடயங்கள் காணப்படுகினறன.

ஒவ்வொரு குடியிருப்பும் உயர் தரமிக்க மூலப்பொருட்கள் அடங்கிய சொகுசு Fittings பொருத்தப்பட்ட Pantry Cupboards பளபளப்பான தரையோடுகள், பொறியியல் கதவுகள் மற்றும் முற்றிலுமாக குளிரூட்டப்பட்ட வசதிகளும் அடங்கியுள்ளன. மேலும் சுத்தமான நீரை வழங்குவதற்காக இந்நிறுவனம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. நீர் சேமித்து வைக்கக்கூடிய பல வசதிகளும் காணப்படுகினறன.

யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதிகள் முன்னேற்றம் அடையும்போது துளசி மஹால் அமைத்துள்ள நிலங்களின் முதலீட்டு வெகுமதி கணிசமான அளவு அதிகரிக்கின்றது. இத்திட்டம் ஆரம்பிக்கும்போது அடுக்குமாடி கட்டிடங்களின் விலை கணிசமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவிருந்தது. யாழ்ப்பாணத்தில் தொடங்கிய வீதி அபிவிருத்தி திட்டமானது தேசிய பொருளாதார வளர்ச்சியில் யாழ்ப்பாணத்தின் பங்களிப்பை உயரச்செய்கின்றது.
வடக்கில் சிறிய மற்றும் கைத்தொழில் வளத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கைத்தொழில் கலாசார அமைச்சு மற்றும் சிறிய நிறுவன அபிவிருத்தியும் இணைந்து அச்சுவேலி கிராமத்தை கைத்தொழில் வலயமாக கட்டியெழுப்புவதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கு பல முதலீட்டு நிறுவனங்களும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவது ஒரு முக்கிய விடயமாகும்.
 
இதன் காரணமாகவே 36 அடுக்குமாடி கட்டிடங்களில் 8 அடுக்குமாடி கட்டிடம் மட்டுமே விற்பனைக்கு மிஞ்சியிருப்பது அதிகபடியான சேவைக்கு ஒரு சான்றாகும். யாழ்ப்பாணத்தில் பிரதான இடத்தில் நவீன அடுக்குமாடி கட்டிடம் நியாயமான விலையில் சொந்தமாக்கி கொள்வது வாழ்க்கையில் வரப்பிரசாதமே. எனவே துளசி மஹால் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றைக் கொள்வனவு செய்வது ஒரு சிறந்த முதலீடாகும்.

No comments:

Post a Comment