Saturday, February 1, 2014

புலி பினாமிகளின் ஆதரவு டெசோ' கூட்டம் இன்று கூடுகிறது!!

Saturday, February 01, 2014
சென்னை::தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில்,புலி பினாமிகளின் தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு (டெசோ) கூட்டம், சென்னை அறிவாலயத்தில் அவசரமாகக் இன்று கூடுகிறது.
 
இலங்கை தமிழர்களின் மறுகுடியமர்த்தல், அரசியல் அதிகாரம், சம உரிமை பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்த, "டெசோ' அமைப்பு துவக்கப்பட்டது. இதன் கடைசி கூட்டம், இரு மாதங்களுக்கு முன் நடந்தது.
 
லோக்சபா தேர்தலை சந்திப்பதற்கு முன், இலங்கை தமிழர் பிரச்னை குறித்து மக்களிடம் எப்படி பிரசாரம் மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கவும், இனப் படுகொலையை, சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட, முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற, "டெசோ' கூட்டம், தி.மு.க., புலி பினாமி தலைவர் கருணாநிதி தலைமையில்இன்று நடக்கிறது.

No comments:

Post a Comment