Monday, February 3, 2014

எமது தலைமைகளை அரசியல்வாதிகளை நாங்களே (புலிகள் ) கொலைசெய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும்: வடக்கின் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன்!

Monday, February 03, 2014
இலங்கை::எமது தலைமைகளை அரசியல்வாதிகளை  நாங்களே (புலிகள் ) கொலைசெய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும்: வடக்கின் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன்!
 
நாங்களே எங்களுடைய அரசியல் தலைமைகளைக் கொலைசெய்தமையினாலேயே

என்னைப் போன்ற ஓய்வுபெற்றவர்களும் அரசியலுக்குள் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் நாங்களே எங்களுடைய அரசியல் தலைமைகளைக் கொன்றமை குற்றமாகும் என வடக்கின் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார் .

 இன்று காலை மானிப்பாய் பிரதேசபையில் சபையில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

 இங்கு அவர் உரையாற்றுகையில் ,

 எங்களுடைய இனம் போரினால் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்து . எம்மில் புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களில் பலர் இன்று புத்திஜீவிகளாகத் திகழ்கின்றனர் . ஆனால் போரினால் மிகவும் பாதிப்படைந்துள்ள நாம் இன்று எமது கல்வியைத் தொலைத்தவர்களாக பின்னிலையிலுள்ளோம் .

 புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்கள் கல்வியில் மிகவும் சிறந்து விளங்குகின்ற பொழுது இங்கிருக்கின்ற எம்மவர் மட்டும் கல்வியைத் தொலைவர்களாக இருக்கின்றமைக்கு நாம் வாழ்ந்த சூழலே காரணமாக அமைந்துள்ளது .

 இதேவேளை எமது அரசியல் தலைமைகளை நாங்களே (புலிகள் ) கொலை செய்தமையினையினாலும் நாம் நீண்டதொரு வெற்றிடத்தினை எதிர்கொண்டுவருகின்றோம் .

எமது தலைமைகளை நாங்களே கொலைசெய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் .

 இதுவே எம்மைப்போன்ற ஓய்வுபெற்றவர்களை அரசியலுக்குள் இழுத்துவருவதற்கான காரணியாக அமைந்துள்ளது .என்றார் .முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன்.

No comments:

Post a Comment