Monday, February 3, 2014

மார்ச் மாதத்திற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேறு வழியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

Monday, February 03, 2014
இலங்கை::மார்ச் மாதத்திற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேறு வழியில் பயணிக்க


வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் .

கூட்டமைப்பின் செயற்பாடு களுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தார் . மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிரான ஒரு பிரேரணையைக் கொண்டு வரும் என அமெரிக் காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் , நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின்போது உறுதிப்படுத்தியிருந்தார் .

அதுமட்டுமல்லாது , தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வொன்று எட்டப்பட வேண்டுமெனில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிச்சயமாக பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனும் நிஷாவுடனான சந்திப் பின்போது தெரிவித்திருந்தார் .

இந்த விடயங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று வினவியபோதே அமைச்சர் வாசுதேவ மேற்கண்டவாறு தெரிவித்தார் . கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு அவர்கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார் .

தற்போது அமெரிக்காவும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படி இலங்கை அரசை சிக்கவைப்பது என்றே சிந்தித்து வருகின்றன . இவர்களுடைய செயற்பாடுகளைப் பார்க்கும் போது இதுதான் தென்படுகிறது .

ஆனால் , அடுத்த மார்ச் மாதத்திற்குப் பிறகு நிச்சயமாக கூட்டமைப்பு வேறு வழியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் . இது உறுதி . '' என்றும் அமைச்சர் தெரிவித்தார் .  
 

No comments:

Post a Comment