Monday, February 03, 2014
இலங்கை::இலங்கை விடயத்தில் சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக தலையிடு வருவதற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா இலங்கையை தண்டிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
ஆசியாவின் பழமையான ஜனநாயகத்தைக் கொண்ட சுயாதீன நாடான இலங்கைக்கு எவரும் பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை அமெரிக்கா விரும்பவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment