Wednesday, February 26, 2014

அதிமுக தேர்தல் அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்:!

Wednesday, February 26, 2014
சென்னை::பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.

ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரிவிலக்கு, தனி ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை என்பன உள்ளிட்ட 43 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

சென்னை அண்ணா திமுக தலைமை கழகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் தமிழ் பிரதியை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.  தேர்தல் அறிக்கையின் ஆங்கில பிரதியை அக்கட்சியின் மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் பெற்றுக் கொண்டார்.

ஒட்டுமெத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அ.தி.மு.க. அறிக்கையில் உள்ளது:

அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஊழல் அற்ற அரசு மத்தியில் அமைய அ.தி.மு.க. உத்தரவாதம்

மேலும், தமிழக வளர்ச்சிக்கான வாக்குறுதிகளும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு பல்வேறு ஊழல் புகார்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஊழல்களுக்கு முக்கிய காரணமாக விளங்குவது ஆட்சியில் வெளிப்படை தன்மை இல்லாதது தான். நாட்டின் சொத்துக்கள், கனிம வளங்கள் ஆகியவை குறைந்த விலையில்  தனியாருக்கு வழங்கப்படாமல், பொது ஏழத்தின் மூலம், அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையிலும், அதன் மூலம் மக்கள் பயன் அடையும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் ஊழல் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை என்ற சூழ்நிலை உருவாகும். இத்தகைய ஊழல் அற்ற அரசு மத்தியில் அமைய அ.தி.மு.க. உத்தரவாதம் அளிக்கிறது என்று  தேர்தல் அறிக்கைதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் மொத்தம் 43 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் முக்கியமான சில: _

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 _ சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக நடவடிக்கை மேற்கொள்வோம்.

_ நதிகளை தேசியமயமாக்கி நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

 _ வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம்.

_ மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்.

__ இலங்கையில் தனி <ழத்துக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

_ ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

 _ மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை தேசிய அளவில் செயல்படுத்துவோம்.

 _ மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.

_ மகளிருக்காக 33 சதவீதம் இடஒதுக்கீட்டு வழிவகை செய்யப்படும்.

_ ரூ5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்க நடவடிக்கை.

 _ மத்தியில் ஊழல்லற்ற அரசு அமைய உத்தரவாதம் அளிப்போம்.

 _ மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பதிலாக அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டம் நடைமுறை

_ தமிழ்நாட்டின் மாதத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை பெறத் தேவையான நடவடிக்கை

_ மின் மிகை மாநிலங்களிலிருந்து மின் குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வகையில், புதிய மின் வழித்தடங்களை அமைக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள்

 _ தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு தேவையான டி.ஏ.எஸ். அனுமதியை பெற நடவடிக்கை

_ காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைககளை அதிமுக எடுக்கும்.

 _ மாநில நலன்களை உள்ளடக்கிய வெளியுறவுக் கொள்கை_ கூட்டுறவு கூட்டாட்சி

 _ அனைத்து கடலோர மாவட்டங்களிலுள்ள நதி முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும்.

 _ எண்ணூர், கடலூர், பூம்புகார், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் கடல் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு காண நிதி

 _ மீனவர் நலனுக்கு தேசிய மீனவர் சேமிப்பு, நிவாரணத் திட்டம்

 _ அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வலியுறுத்துவோம்.

  _ இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த நடவடிக்கை.

_ தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை இலங்கை அரசை வலியுறுத்துவோம்

 _ இலங்கை_ இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க தேவையான நடவடிக்கை

 _ மாவட்டங்களிலுள்ள உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும்.

_ 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

 _ வரி ஏய்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

. _ இந்திய நாட்டின் வருவாயைப் பெருக்க வழிவகை செய்யப்படும்.

 _ மத்திய அரசால் வழங்கப்படும் முதியோருக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த நடவடிக்கை

 _ பயிர் கடன்களை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை

_ ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை

 _ மதம் மாறிய ஆதிதிராவிடர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

 _ பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்

. _ பெட்ரோலியம் பொருட்களின் விலை உயர்வினால் ஏற்படும் பாதிப்பினை அகற்ற தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

 _ பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஆண்டு முழுவதும் சீராக இருக்க உறுதி செய்யப்படும்.

_ இயற்கை எரிவாயுவினை எடுக்கும் நிறுவனங்களுக்கான விலை உயர்வு மறு ஆய்வு செய்யப்படும்.

 _ அந்தந்த நாட்டு செலாவணி மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பினை நிர்ணயம் செய்வதற்கு நடவடிக்கை

 _ பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அ,தி.மு.,க,தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
   

No comments:

Post a Comment