Wednesday, February 26, 2014
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முழு விபரம் வருமாறு:_
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி என்பது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கையையும், நிதிக் கொள்கையையும் பொருத்தே அமைவதால், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழகத்திற்குரிய பங்கினைப் பெற, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஓர் அரசு மத்தியில் அமைவது அவசியம்; அத்தியாவசியம்; காலத்தின் கட்டாயம். அப்போது தான் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.
1. கூட்டுறவு கூட்டாட்சி
இன்றைய சழ்நிலையில் இறையாண்மையை தமக்குள் பகிர்ந்து கொண்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தாமல் தத்தம் எல்லைக்குள், தனக்கான எல்லைக்குள் சுதந்திர செயல்பாட்டோடு பொதுப் பிரச்சனைகளை கூட்டுறவு மனப்பான்மையுடன் அணுகி தீர்வு காண வேண்டும். இதுவே கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் ஆகும். இந்தக் கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த, செயல்படுத்த, நிலைநிறுத்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.
2. இலங்கைத் தமிழர் பிரச்சனை
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி <ழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி பூண்டுள்ளது.
3. தமிழக மீனவர் நலன்
மீன்பிடித் தொழிலை லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அந்நியச் செலாவணியை <ட்டுவதில் முக்கியப் பங்கினை மீன்பிடித் தொழில் வகிக்கிறது. இருப்பினும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் துரித நடவடிக்கைகளின் காரணமாக, சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை அரசால் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. மாறாக, இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது. சட்டவிரோதமாக அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும்; தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை மற்றும்
இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மத்திய அரசு மூலம் முழு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழக மீனவர்களின் வளத்தினை உறுதி செய்யும் வகையில், சென்னை காசிமேடு, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும். புலிக்கட் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலுள்ள நதி முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும்.
எண்ணூர், கடலூர், பூம்புகார், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கடல் அரிப்பு பிரச்சனையை தடுக்கும் வகையில், போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மீனவர்களின் நலன்களைக் பாதுகாக்கும் வகையில் தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் சீரமைக்கப்படும்.
4. கச்சத்தீவு மீட்பு
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றால், கச்சத்தீவினை மீட்டெடுப்பது தான் ஒரே தீர்வு என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது.
1960 ஆம் ஆண்டைய பெருபாரி வழக்கினை மேற்கோள் காட்டி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல், இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை
1974 மற்றும் 1976 ஆம் ஆண்டைய இந்திய_இலங்கை ஒப்பந்தங்களின்படி இலங்கை நாட்டிற்கு தாரைவார்த்தது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில்
2008_ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
5. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தக் கொள்கை தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கொள்கை இந்தியாவில் உள்ள உற்பத்தித் துறையையும், சேவைத் துறையையும் வெகுவாகப் பாதிக்கும். இந்தக் கொள்கை உள் நாட்டில் உள்ள விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு, அமைப்புசாரா சில்லரை வர்த்தகத் துறையையும் அழித்துவிடும். இந்தக் கொள்கையை அகில இந்திய அளவில் அகற்றத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
6. தமிழ் ஆட்சி மொழி
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றும், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றெல்லாம் தமிழ்மொழியை, ஏற்றியும், போற்றியும் பாடியுள்ளார் மகாகவி பாரதியார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி,
தமிழ் மொழி. பிற மொழிகளிலிருந்து தனித்து இயங்கக் கூடிய தன்மை உடையது தமிழ் மொழி. தமிழ் என்றால் அழகு; தமிழ் என்றால் இனிமை;
தமிழ் என்றால் இளமை. இப்படிப்பட்ட பழமை வாய்ந்த, தொன்மை வாய்ந்த தமிழ் மொழி, இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும். இதுவன்றி, சென்னை
உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
7. அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம்
தமிழ்நாட்டில் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.
இது தவிர, ஒரு லிட்டர் பாமாயில் 25 பொய்க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு
30 பொய்க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 30 பொய்க்கும், ஒரு கிலோ சர்க்கரை 13 பொய் 50 காசுக்கும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் உணவுப் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் வழங்கும் திட்டம் ஆகும். இந்த அளவுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கும் திட்டமாக, தற்போது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புத் திட்டம் இல்லை. எனவே, அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் இருக்கின்ற மாநிலங்களில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பதிலாக அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
8. மண்ணெண்ணெய் ஒதுக்கீடு
மாநிலங்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு மத்திய அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் மண்ணெண்ணெய் தேவை மாதத்திற்கு 65,140 கிலோ லிட்டர் ஆகும். ஆனால், தமிழ்நாட்டின் முழுத் தேவையையும் மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. மாறாக, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டினை கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்படியாகக் குறைத்து வருகிறது. தற்போது மாதத்திற்கு 29,056 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு தமிழ்நாட்டின் தேவையில் பாதிக்கும் குறைவாகும். எனவே, தமிழ்நாட்டின் மாதத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை பெறத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
9. மின்சார வழித்தடங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்படுத்துதல்
மின்சாரத்தை வெளி மாநிலங்களிலிருந்து, குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொள்முதல் செய்ய வேண்டுமென்றால், அதற்கு மிக அவசியமாக இருப்பது மின் வழித்தடங்கள். இந்த மின் வழித்தடங்களை புதிதாக ஏற்படுத்தாததன் காரணமாகவும்; இருக்கின்ற மின் வழித்தடங்களை வலுப்படுத்தாததன் காரணமாகவும்; மின் மிகை மாநிலங்களிலிருந்து
மின் குறை மாநிலங்களுக்குத் தேவையான மின்சாரத்தை எடுத்துச் செல்வதில் சிரமங்கள் நிலவுகின்றன. எனவே, மின் மிகை மாநிலங்களிலிருந்து மின் குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வகையில், புதிய
மின் வழித்தடங்களை அமைக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
10. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு அனுமதி
தமிழ்நாட்டு மக்கள் குறைந்த செலவில் நிறைவான சேனல்களைக் கண்டு களிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தனது சேவையை ஆற்றி வருகிறது. இருப்பினும், சென்னை நகரத்தில் இந்தச் சேவையை அளிப்பதற்கான னுஹளு அனுமதியை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்காததால், மக்கள் தனியார் நிறுவனங்களின் சேவைகளை நாடிச் செல்லக் கூடிய சழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு தேவையான னுஹளு அனுமதியை பெற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும். இதே போன்று, அனைத்திந்திய அளவில் மாநில அரசுகள் கேபிள் டி.வி. சேவை வழங்குவது ஊக்குவிக்கப்படும்.
11. காவேரி மேலாண்மை வாரியம்
காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டும், அப்போதைய தி.மு.க. அரசு மற்றும் மத்திய காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட சதியினால், மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உச்ச நீதிமன்றம் மூலமாகப் போராடி அதனை மத்திய அரசிதழில் 19.2.2013_ல் வெளியிடச் செய்தார். காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு,
ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும், காவேரி நீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்து விடுவதைக் கண்காணிக்க தேவையான காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. இது சம்பந்தமான வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
12. மதச்சார்பின்மை
இறையாண்மையும், சமநலச் சமுதாயமும், மதச்சார்பின்மையும், மக்களாட்சி முறையும் கொண்ட நாடு இந்தியா. இந்திய நாடு பல்வேறு மொழிகளை பேசுகின்ற மக்களையும், பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றுகின்ற மக்களையும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களையும் கொண்டிருந்தாலும், அனைத்து மக்களும் இந்தியர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு திகழ்கிறார்கள். அனைத்து மக்களும் தங்கள் நம்பிக்கை வழியில் சுதந்திரமாக செயல்பட வழிவகுப்பதே மதச்சார்பின்மை ஆகும். இந்தியாவில் பல்வேறு மதங்கள் பின்பற்றப்படினும், அம்மதங்களைப் பின்பற்றுவோர் ஒருவரை ஒருவர் மதித்து ஒற்றுமையுடன் வாழ்வதை மதச்சார்பின்மை தத்துவம் வலியுறுத்துகிறது. அனைத்து மதங்களையும் நடுநிலையோடு பார்ப்பதையும், சமமாக பாவிப்பதையும் மதச்சார்பின்மை
உறுதி செய்கிறது. இந்த மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும், மேம்படுத்தவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.
13. சமூக நீதி
சமூக நீதி என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு சமவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது ஆகும். சமூகத்தின் வேறுபாடுகளைக் களையும் வகையில், சமூக நீதிக் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தும் போது அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதற்குரிய சழ்நிலை உருவாகும். இதன் அடிப்படையில் தான், தமிழ்நாட்டில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்ட போது, இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி அதனை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து, இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கியவர் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும். இதே போன்று, அந்தந்த மாநிலங்கள், மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
14. மகளிர் நலன்
மகளிர் நலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. பெண் சிசுக் கொலையை அறவே ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம் தொட்டில் குழந்தைத் திட்டம். இந்தத் திட்டம் இன்றளவிலும் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டங்களின் கீழ் 25,000 பொய் உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு 50,000 பொய் உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை இருந்தால் 50,000 பொயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவரின் பெயரிலும் தலா 25,000 பொயும் வைப்பீடு செய்யும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் அதிரடிப்படை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், குழந்தையின் பெயருக்கு முன்பு தாய் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக சேர்த்தல் என்ற புரட்சிகரமான உத்தரவு, இந்தியாவிற்கே வழிகாட்டியாக பாலியல் பலாத்காரத்தை தடுக்க
13 அம்சத் திட்டம் என பெண்கள் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.
15. மகளிர் இடஒதுக்கீடு
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கிணங்க, எல்லாவற்றிலும் மகளிருக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவாகள். இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், 1990_ஆம் ஆண்டிலேயே கட்சிப் பதவிகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியவர் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். 1991_ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தான்
முதன் முதலாக சட்டமன்றத்திற்கு 31 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்தப் பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும். அரசியலில் பெண்கள் அதிகாரம் படைத்தவர்களாக விளங்க வேண்டுமென்றால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்ற கொள்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உறுதியாக உள்ளார்கள். இந்தக் கொள்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
16. நதிகள் இணைப்பு மற்றும் தேசியமயமாக்கம்
வைங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்$ என்று கனவு கண்டார் மகாகவி பாரதியார். கங்கை, துங்கபத்திரா, கிருழணா, காவேரி ஆகிய நதிகளை இணைத்தால் இந்திய நாடு வளம் பெறும், ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுக்கும். இந்தியா விடுதலைப் பெற்று 66 ஆண்டுகள் ஆகியும் இதை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வற்றாத ஜீவநதிகள் பல வட பகுதியில் இருந்தாலும், அவை தென் பகுதி பயிர்த் தொழிலுக்குப் பயன்படவில்லை. நாட்டின் ஒரு பகுதியில் வெள்ளம், புயல் போன்ற அபாயம் நிலவுகிறது. மற்றொரு பகுதியில் வறட்சி தாண்டவமாடுகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் வளம் பெற வேண்டும் என்றால் நீர் பரிமாற்றம் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆறுகளும் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும். நதிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கும், நதிகளை இணைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
17. பொதுத் துறை நிறுவனப் பங்குகள்
பொதுத் துறை நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதன் காரணமாக, பொதுத் துறை என்பதன் முக்கியத்துவமே நீர்த்துப் போகிறது. நாட்டின் முன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவை பொதுத் துறை நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பங்குதாரர்கள், அதாவது தனியாரிடம் சென்றால், அதனுடைய நோக்கத்திலிருந்து அந்த நிறுவனங்கள் விலகிச் சென்றுவிடும். இதன் காரணமாக, தொழில் அமைதியின்மை ஏற்பட்டு, தொழிலாளர் பிரச்சனைகள் உருவாகின்றன. எனவே, பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உறுதியாக உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முற்பட்ட போது, அதை எதிர்த்து குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய சாதுர்யத் தன்மையினால், மதி நுட்பத்தினால், அந்தப் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கே விற்பனை செய்ய பரிந்துரைத்து அதில் வெற்றி கண்டவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படாமல் இருப்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி செய்யும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் முற்றிலும் நிறுத்தப்பட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.
18. வெளியுறவுக் கொள்கை
இந்திய வெளியுறவுக் கொள்கை வலுவாக இல்லாததாலும், நாட்டிற்கு வலிமையான தலைமை இல்லாததாலும், சீனாவின் அச்சுறுத்தல், காழமீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் துணையோடு தீவிரவாதிகள் சதிவேலை, இலங்கை கடற்படையின் அட்டகாசம் ஆகியவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்திய நாட்டின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அண்டை நாடுகளுடனான நீண்ட நாள் எல்லைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும். வெளியுறவுக் கொள்கை என்பது மாநில நலன்களுக்கு எதிராக அமையக் கூடாது. எனவே, மாநில நலன்களை உள்ளடக்கிய வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படும்.
19. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கை
சர்வதேச சந்தையில் உள்ள பெட்ரோல், டீசல் விலையைக் கருத்தில் கொண்டும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பினைக் கருத்தில் கொண்டும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பதால், மாதத்திற்கு இரு முறை பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுகின்றன. இந்திய பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்குபவை பெட்ரோல் மற்றும் டீசல். இதன் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொண்டே செல்வதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விஷம் போல் ஏறிக் கொண்டே இருக்கின்றன. இந்திய நாட்டிற்கு தேவையான மொத்த கச்சா எண்ணெயில் 25 விழுக்காடு இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 75 விழுக்காடு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்கையில், சர்வதேச சந்தையில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை அடிப்படையாகக் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது நியாயமற்ற செயல். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான செலவு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் விலை, இவற்றை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இவற்றின் விலை நியாயமானதாக இருக்கும். இதன் மூலம் விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும். இதன் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளையும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும். அதே போல்,
பல நாடுகளுடன் அந்தந்த நாட்டு செலாவணி மதிப்பில் இந்திய பொய் மதிப்பினை நிர்ணயம் செய்வது, அதாவது ஊரசசந&உல ளுறயயீ செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்திய பொயின் மதிப்பு வேறுபாடு காரணமாக ஏற்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை களையும் வகையில், இதற்கென தனி நிதியம் ஏற்படுத்தப்படும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருப்பது உறுதி செய்யப்படும். மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை எரிவாயு விலை என்பது உலகச் சந்தையின் அடிப்படையிலும், அமெரிக்க டாலர் கணக்கீட்டின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இயற்கை வாயுவினை எடுக்கும் நிறுவனங்களுக்கான விலையை
1.4.2014 முதல் மத்திய அரசு இரட்டிப்பு ஆக்கியுள்ளது. இந்த விலை உயர்வு
மறு ஆய்வு செய்யப்படும்.
20. கருப்புப் பணத்தை மீட்டெடுத்தல்
அயல் நாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி பொய் அளவுக்கு இந்திய கருப்புப் பணம் இந்தியர்களால் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சி உருவாக்கப்படின், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் என்பது ஒரே வருமானத்திற்கு இரு நாடுகளுக்கு வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் ஆகும். இதன் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மேலும் இந்த ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி, நம் நாட்டுக்கு உரிய வரி வருவாய் கிடைத்திடாமல் செய்யப்படுகின்றது. மேலும், மாற்று விலைக் கொள்கையில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது. இவற்றை தடுத்து, வரி தவிர்ப்பு என்ற போர்வையில்
வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இந்திய நாட்டின் வருவாயைப் பெருக்கவும் வழிவகை செய்யப்படும்.
22. தொலைநோக்குத் திட்டம் 2023
வளர்ந்த நாடுகளுக்கு <டாக தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற அடிப்படையிலும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023_ஐ தயாரித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இது போன்றதொரு திட்டத்தை இந்தியா முழுமைக்கும் தீட்டி, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
23. சிறுபான்மையினர் நலன்
சிறுபான்மையினர் நலன்களை காப்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல மானியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இதன் மூலம் ஆண்டுதோறும் 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியத் தொகையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு உயர்த்தி இருக்கிறது. வக்டிபு வாரிய நிருவாக மானியத் தொகை ஒரு கோடி பொயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வக்டிப் நிறுவனங்கள் மேம்பாட்டு நிதிக்கு 2012_2013 ஆம் ஆண்டு 3 கோடி பொய் மானியம் வழங்கப்பட்டது. சிறுபான்மையினர் சுயதொழில் புரியும் வகையில், தொழில் தொடங்குவதற்கு அதிக அளவில் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
நீண்ட நாள் கோரிக்கையான மதம் மாறிய ஆதி திராவிடர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
24. முதியோர் நலன்
முதியோர்களுக்கு மதிப்பளித்தல் இந்திய நாட்டின் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இருப்பினும், தனிக் குடும்பங்கள் பெருகி வருவதால், முதியோர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையைப் போக்க, இன்று தமிழ்நாட்டில் முதியோர்கள் உட்பட 37 லட்சம் நபர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசால் வழங்கப்படும் முதியோருக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.
முதியோருக்கு மருத்துவ வசதி அளிக்கப்படுவது இன்றியமையாதது ஆகும். இதனைக் கருத்தில்கொண்டு, வயது வரம்பின்றி அனைத்து முதியோரும் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழிவகை செய்துள்ளார்கள். இதனை அகில இந்திய அளவில் நிறைவேற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.
25. மாற்றுத் திறனாளிகள் நலன்
மாற்றுத் திறனாளிகள் சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு படி 1,500 பொயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு படியினை இந்தியா முழுவதும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டுமல்லாமல், அரசு வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இடங்களை நிரப்ப ஒரு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரிச் சட்டம் பிரிவின்கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது குடும்பங்களுக்கு அளிக்கப்படும் சலுகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படவும், பொதுக் கட்டடங்களில் உள்ள அலுவலகங்களை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகுவதை உறுதி செய்யும் வகையிலும், சாய்தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
26. மாநில அரசின் வருவாயைப் பறிக்க வழிவகை செய்யும் வருமான வரிச் சட்டத்தை திருத்தி அமைத்தல்
மாநில அரசுகளால் பொதுத் துறை நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அனுமதி கட்டணம், உரிமைப் பங்கு, உரிமைக் கட்டணம் ஆகியவற்றிற்கான தொகையை மாநில பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம் என்ற நிலை 2012_2013 ஆம் ஆண்டு வரை இருந்தது. இதனை மாற்றி, மாநில அரசால் விதிக்கப்படும் கட்டணங்களை தங்களது வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளக் கூடாது என்று வருமான வரிச் சட்டம் 40_ல் திருத்தம் செய்யும் வகையில்,
நிதிச் சட்டத்தினை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம்,
வரி அல்லாத வகையில் மாநில அரசுகளுக்கு நியாயமாக கிடைக்கும் வருவாயினை மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளதோடு, மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளது. அதே சமயத்தில், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் இந்தச் சலுகையை அனுபவிக்கின்றன. இந்தச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
27. நிலக்கரி சுரண்டல்
மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாததாக விளங்கும் நிலக்கரியை வெட்டி எடுக்கும் உரிமை பொது ஏல முறை மூலம் தனியாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று 2004_ஆம் ஆண்டே மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கான வழிமுறைகளை மத்திய அரசு செய்யவில்லை. மாறாக, நியமன அடிப்படையில் பல்வேறு இடங்களில் நிலக்கரியை வெட்டி எடுக்கும் உரிமை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விடப்பட்டது. இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்தன. மத்திய அரசுக்கு இதனால் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி பொய் இழப்பு ஏற்பட்டது என்று மத்திய அரசின் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. குறைந்த விலையில் மாநில துறைகளுக்கு நிலக்கரி கிடைக்கும் வகையிலும், மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையிலும், தற்போதுள்ள நிலக்கரி எடுப்பு முறை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
28. இயற்கை வளங்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை
நாட்டின் இயற்கை வளங்கள் நியாயமான விலையில் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில், வெளிப்படையான இயற்கை வளக் கொள்கையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கும்.
29. தனி நபர் வருமான வரி
தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தின்படி, 2 லட்சம் பொய்க்கு மேல் ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டும். இதன் காரணமாக, சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற சழ்நிலையில், வருமான வரி அவர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, சாதாரண மக்களுக்கு ஓரளவு பயனளிக்கும் வகையில், 5 லட்சம் பொய் வரை ஆண்டு வருமானம் பெறும் தனி நபருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.
30. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை
வெளிநாட்டு வர்த்தகம் என்பது அந்நியச் செலாவணியை <ட்டுவதற்காக மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை பெரிய அளவில் உயர்த்துவதற்கும் பயன்படுகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை என்பது போட்டிகளுக்கு <டு கொடுக்கக் கூடியதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உள்நாட்டு நிறுவனங்கள் சர்வதேச அளவில் மிகப் பெரிய நிறுவனங்களாக உருவாவதற்கான வாய்ப்புகள் உடையதாக இருக்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்காமல், பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால், உள்நாட்டு வேளாண் உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டு, இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர். சில்லரை வர்த்தகத்தில் கூட அந்நிய முதலீட்டை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையிலும், உள்நாட்டு நிறுவனங்கள் சர்வதேச அளவில் போட்டியிடக் கூடிய வகையிலும், இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ஆகும். இது போன்ற கொள்கையினால் மட்டுமே ஏறி வரும் பண வீக்கத்தையும், இந்திய பொயின் வீழ்ச்சியையும் கட்டுப்படுத்த முடியும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. இவற்றை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
31. மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களைப் பெருக்க நடவடிக்கை
மக்களை நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய அரசுகள் மாநில அரசுகள் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, சத்துணவு மற்றும் மக்கள் நல்வாழ்வு போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத் தான் இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் இன்றியமையாததாக விளங்குவது நிதி ஆதாரம். மக்களுக்குத் தேவையான குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய, மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், அனைத்து நிதி அதிகாரங்களும் மத்திய அரசிடமே குவிந்து உள்ளன. இந்த நிதி ஆதாரங்களை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுப்பதில் மாற்றம் தேவை என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. மாநில அரசுகளுக்கு பிரித்துக் கொடுக்கக் கூடிய இனங்களில் இல்லாத தீர்வை, அதாவது ஊநளள மற்றும் கூடுதல் வரி, அதாவது ளுரசஉ"யசபந ஆகியவற்றை மத்திய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது. இது போன்ற நிதி ஆதாரங்கள் மத்திய அரசின் மொத்த வரி வசலில் 8 விழுக்காடாக உள்ளது. எனவே, இது போன்ற வரி வருவாயையும் மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்க வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்.
பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய வெளிப்படையற்ற முறையிலான மானியங்களை தன் விருப்பத்திற்கேற்ப மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இதனை மாற்றி, மானியங்களை வெளிப்படையான முறையில் மாநிலங்களுக்கு வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும். மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் 275_ல் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள விருப்புரிமை அதிகாரத்தின்படி, மாநிலங்களுக்கு வழங்கும் மானியத்தின் அளவை மத்திய அரசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏழாவது நிதிக் குழுவின் பரிந்துரையின் போது, மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் தொகையில் 7.2 விழுக்காடாக இருந்த மாநிலங்களுக்கான மொத்த மானியம் தற்போது 18.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மேலும், விருப்புரிமையில் அளிக்கப்படும் மானியங்கள் ஒருதலைபட்சமானதாகவும், வெளிப்படையற்றதாகவும் அமைய வழிவகுக்கும். எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம் 275_ன்படி மத்திய அரசின் விருப்புரிமையில் அளிக்கப்படும் மொத்த மானியங்களின் அளவை 7 விழுக்காடாக குறைக்கவும், நிதிக் குழுவின் மூலமாக வழங்கப்படும் தொகையை அதிகரிக்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.
மாநில அரசுகளின் செலவினங்களுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை வகுத்துத் தராமல், சத்தமின்றி செலவினங்களை மட்டும் மாநில அரசுகளின் மேல் சுமத்துவதை மத்திய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த வஞ்சகத் தன்மையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கிறது. மானியம் உட்பட செலவினப் பொறுப்பை மாநில அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்கும் போது, அதற்குத் தேவையான நிதி ஆதாரத்தையும் அளிக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
32. ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் குறியீடுகளாக ரகுராம் ராஜன் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட குறியீடுகள் சரியானவை அல்ல. அதன் அடிப்படையிலே மட்டும் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு என்பது தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், இதனை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பதினான்காவது நிதிக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. நிதி ஆதாரமின்மையின் அடிப்படையில் நிதிப் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் போது, சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதிலும்,
1971 ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கீட்டை இதற்குப் பின்பற்ற வேண்டும் என்பதிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரையினை பின்பற்றாமல், 14 ஆவது நிதிக் குழு தனது கடமையினை சுதந்திரமாக செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. இவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
33. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி
மத்திய அரசின் வருவாயில் பிரிக்கக் கூடிய இனங்களிலிருந்து 5 விழுக்காடு தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.
34. விரிவான பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை
ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகும் போது, செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டு, அதுவே நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கு மூல காரணமாக அமைகிறது. நாட்டிற்கு வரும் அந்நிய செலாவணி மற்றும் நாட்டை விட்டுச் செல்லும் அந்நியச் செலாவணி ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடு தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருட்களை ஊக்குவித்து, அவை உள்ளூர் தேவையை நிறைவு செய்வதோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும். உள்நாட்டில் தட்டுப்பாடு இருக்கும் பொருட்களை மட்டும் தேவைக்கேற்ப இறக்குமதி செய்ய வேண்டும். இது போன்றதொரு கொள்கை முடிவு எடுக்கப்படுமானால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைவதோடு, நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
நாட்டின் பொருளாதாரம் அதிர்ச்சிகளுக்கு உட்படுத்தப்படாமல் இருக்க நாட்டின் செலாவணி, அதாவது பொயின் மதிப்பு சீராக, நிலையாக இருக்க வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறுகிய காலத்திற்கு கொண்டு வரப்படும் அந்நிய முதலீடுகள், அதாவது இந்திய பங்குச் சந்தையிலோ அல்லது கடன் சந்தையிலோ போடப்படும் அந்நிய செலாவணி குறுகிய காலத்தில் எடுக்கப்படுவதால் இந்திய பொயின் மதிப்பில் மிகுந்த ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. எனவே, இது போன்ற குறுகிய முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நீண்டகால அந்நிய நேரடி முதலீட்டிற்கு, அதாவது குடிசநபை& னுசைநஉவ ஐ&எநளவஅநவே_க்கு முக்கியத்துவம் அளிக்கவும், செலாவணி அடிப்படையிலான வணிகத்தை, நீக்கவும் வழிவகை செய்யப்படும்.
இதே போன்று, பணவீக்கம் குறைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக, நுகர்வோர் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக உள்ளீட்டு செலவுகள், குறைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
மொத்தத்தில், அதிக வளர்ச்சி, குறைந்த நுகர்வோர் பணவீக்கம், குறைந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவற்றை எய்துவதற்கான விரிவான பொருளாதாரக் கொள்கை, வகுக்கப்படும்.
35. வேளாண்மை
2011_2012 ஆம் ஆண்டில், உணவு தானிய உற்பத்தியில் 101.51 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை தமிழ்நாடு எய்தியது. இந்தச் சாதனையை எய்தியதற்காக, மத்திய அரசின் விருது தமிழகத்திற்கு கிடைத்தது. வேளாண் விளைபொருள்களின் உற்பத்தியை பெருக்குதல், புதிய உத்திகளை கடைபிடித்தல், இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம், உற்பத்தித் திறனை அதிகரித்தல், தேவையான நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்துதல், சந்தைக்கு உகந்த விநியோக கட்டமைப்பை உருவாக்குதல், கிடங்குகளை ஏற்படுத்துதல், வேளாண் துறையில் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
பயிர்க் கடன்களை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு, மாநாட்டில், இந்திய விவசாயிகளுக்கு எதிரான பல ஷரத்துகளுக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொது பொருள் இருப்பு திட்டங்களுக்கு, வழங்கப்படும் மானியங்கள் நடவடிக்கைக்குரிய மானியங்கள் என்பதிலிருந்து நீக்கப்படவில்லை. மொத்த உணவு தானிய உற்பத்தி மதிப்பில்
10 விழுக்காட்டிற்கு மேல் மானியம் இருந்தால் 4 ஆண்டுகள் வரை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும், பின்னர் இது குறித்து திறனாய்வு செய்யப்படும் என்பதும், இந்த மானியங்கள் 1986 ஆம் ஆண்டைய சந்தை விலை அடிப்படையில் இருக்கும் என்பதும் இந்தியாவிற்கு பாதகமான அம்சங்கள் ஆகும். இதே போன்று, வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், துறைமுகங்களின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சி அடைந்த நாடுகள் பொருட்களை வளர்ச்சியுறும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்தான் வசதி அளிக்கிறது.
இது போன்ற இந்தியாவிற்கு பாதகமான அம்சங்களை மாற்றியமைக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.
36. உழவர் பாதுகாப்புத் திட்டம்
தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு/குறு விவசாயிகளுக்கும் வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக் கூடிய தைமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்$ என்ற சமூக பாதுகாப்புத் திட்டம், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால், 15.8.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2006க்குப் பின்னர், தி.மு.க. அரசு, இதனைக் கைவிட்டு, இதற்கு மாற்றாக ஒரு சட்டம் கொண்டு வந்தது. விவசாயிகளுக்கு இதில் போதிய அளவு நல உதவிகள் இல்லாததால், 2011ஆம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால், +முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்$ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், இறப்பு நிவாரணத் தொகை ஆகியவை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் இந்த உழவர் பாதுகாப்புத் திட்டத்தை, அகில இந்திய அளவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்திடும்.
37. உற்பத்தித் துறை
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இன்றியமையாததாக விளங்குவது உற்பத்தித் துறை. இந்தத் துறையை மேம்படுத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது. இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் வகையில், ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடையில்லா மின்சாரம், குடிநீர் ஆகிய வசதிகள் செய்து தரப்படுவதோடு, அனைத்து அனுமதிகளும் வெளிப்படையான முறையில், வேகமாக தரப்படுவதால், தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உற்பத்தி துறையை பெருக்கும் வகையில் தொழிற் கொள்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளார்கள். அகில இந்திய அளவில் இதே போல் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
உற்பத்தி மண்டலம் ஒன்றினை ஏற்படுத்தவும், உள்நாட்டு சேமிப்பினை ஊக்கப்படுத்தவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக, உற்பத்தி துறையில் முதலீடுகள் பெறுக வழிவகை செய்யப்படும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 விழுக்காடு உற்பத்தி துறை மூலம் பெறப்படுவது உறுதி செய்யப்படும்.
38. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறிய, நடுத்தர தொழில் துறையின் போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில், சுலபமான கடன் வசதி, சாதகமான ஒழுங்குமுறை மற்றும் கொள்கை சழல், தொழில்நுட்ப வசதி,
39. அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்கள்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக வாரியம் அமைத்து, அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அனைத்து மாநிலங்களிலும் வாரியங்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
40. ஜவுளித் தொழில்
இந்தியாவின் பழம்பெரும் தொழில்களில் ஒன்று ஜவுளித் தொழில்.
அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதிலும், அந்நியச் செலாவணியை <ட்டித் தருவதிலும் ஜவுளித் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளாக உலக ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 3 முதல் 4 விழுக்காடு என்ற தேக்க நிலையிலேயே இருந்து வருகிறது. அதே சமயத்தில், சீனாவின் பங்கு 35 விழுக்காடாகவும், 2005_ஆம் ஆண்டு முதல் ஜவுளித் தொழிலில் <டுபட்டு வருகின்ற வியட்நாமின் பங்கு 3.5 விழுக்காடாகவும் உள்ளது. ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
41. வேலைவாய்ப்பினை அதிகரித்தல்
தமிழ்நாட்டில் வேலையில்லாமல் எந்த இளைடனும் இருக்கக் கூடாது என்பதும், வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதும்; அனைவருக்கும் மருத்துவ உதவி, கல்வி, குடிநீர் விநியோகம், கழிவு நீரகற்றுதல் ஆகிய வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதும்; அனைவரும் வளம், பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவு. இந்தக் கனவினை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்_2023_ன் இரண்டு பாகங்களை வெளியிட்டதோடு தொழிற் கொள்கையையும் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான இளைடர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான இளைடர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் தீவிர முயற்சியால், கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் கிராமப்புறங்கள் சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளன. வேளாண் அல்லாத துறையில் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உருவாக்குவதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பாலான இளைடர்கள் அவர்கள் விரும்பும் எதிர்காலத்தை வகுத்துக் கொள்ள உறுதி அளிப்பதே வறுமையை ஒழிக்கும் மருந்தாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். உற்பத்தித் துறை, சிறுதொழில் துறை மற்றும் சேவைத் துறை ஆகியவற்றில் இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தொழில்நுட்பத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளாகவும் அவை இருக்கும். இதற்கு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான சாதகமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இது தவிர, பெரிய நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்தப் பணிகளில் இளைடர்களை நியமிக்கத் தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்யும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் இணக்கமான தொழில் கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்.
42. ஊழல் ஒழிப்பு
காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு பல்வேறு ஊழல் புகார்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஊழல்களுக்கு முக்கிய காரணமாக விளங்குவது ஆட்சியில் வெளிப்படைத் தன்மை இல்லாதது தான். நாட்டின் சொத்துக்கள், கனிம வளங்கள் ஆகியவை குறைந்த விலையில் தனியாருக்கு வழங்கப்படாமல், பொது ஏலத்தின் மூலம், அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையிலும், அதன் மூலம் மக்கள் பயனடையும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் ஊழல் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்ற சழ்நிலை உருவாகும். இத்தகைய ஊழலற்ற அரசு மத்தியில் அமைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உத்தரவாதம் அளிக்கிறது.
43. செயல்படும் மத்திய அரசு
கடந்த பத்து ஆண்டுகளாக ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகள் எதையும் எடுக்க முடியாத நிலையிலேயே மத்திய அரசு இருந்தது. கொள்கை முடக்குவாதத்தால் அது பரிதவித்தது. எடுக்கப்பட்ட சில துறை சார்ந்த கொள்கை முடிவுகளில், பெரும்பாலானவை தவறானதாகவும், காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைந்தால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் திடமான கொள்கை முடிவுகளை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய திடமான முடிவுகளை எடுத்திட உறுதியான, துணிச்சலான, வலிமையான தலைமை தேவை. அத்தகைய தலைமையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை::தமிழகத்தை இந்தியாவில் முதன்மை மாநிலமாக ஆக்குவோம்
என்றும் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்றும் முதல்வர்
ஜெயலலிதா நேற்று வெளியிட்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முழு விபரம் வருமாறு:_
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி என்பது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கையையும், நிதிக் கொள்கையையும் பொருத்தே அமைவதால், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழகத்திற்குரிய பங்கினைப் பெற, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஓர் அரசு மத்தியில் அமைவது அவசியம்; அத்தியாவசியம்; காலத்தின் கட்டாயம். அப்போது தான் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.
தமிழக மக்களின் துன்பங்களைப் போக்கும் வகையில், துயர்களைத் துடைக்கும்
வகையில், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கும் வகையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கீழ்க்கண்ட வாக்குறுதிகளை
மக்களுக்கு அளிக்கிறது.

21. பிற நாடுகளுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வு

எளிய விற்பனை வசதி, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை செய்து தர மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்து
வருகிறார்கள். இதனை அகில இந்திய அளவில் கொண்டுவரத் தேவையான
நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
எடுக்கும்.
39. அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்கள்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக வாரியம் அமைத்து, அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அனைத்து மாநிலங்களிலும் வாரியங்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
40. ஜவுளித் தொழில்
இந்தியாவின் பழம்பெரும் தொழில்களில் ஒன்று ஜவுளித் தொழில்.
அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதிலும், அந்நியச் செலாவணியை <ட்டித் தருவதிலும் ஜவுளித் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளாக உலக ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 3 முதல் 4 விழுக்காடு என்ற தேக்க நிலையிலேயே இருந்து வருகிறது. அதே சமயத்தில், சீனாவின் பங்கு 35 விழுக்காடாகவும், 2005_ஆம் ஆண்டு முதல் ஜவுளித் தொழிலில் <டுபட்டு வருகின்ற வியட்நாமின் பங்கு 3.5 விழுக்காடாகவும் உள்ளது. ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
41. வேலைவாய்ப்பினை அதிகரித்தல்
தமிழ்நாட்டில் வேலையில்லாமல் எந்த இளைடனும் இருக்கக் கூடாது என்பதும், வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதும்; அனைவருக்கும் மருத்துவ உதவி, கல்வி, குடிநீர் விநியோகம், கழிவு நீரகற்றுதல் ஆகிய வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதும்; அனைவரும் வளம், பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவு. இந்தக் கனவினை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்_2023_ன் இரண்டு பாகங்களை வெளியிட்டதோடு தொழிற் கொள்கையையும் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான இளைடர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான இளைடர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் தீவிர முயற்சியால், கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் கிராமப்புறங்கள் சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளன. வேளாண் அல்லாத துறையில் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உருவாக்குவதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பாலான இளைடர்கள் அவர்கள் விரும்பும் எதிர்காலத்தை வகுத்துக் கொள்ள உறுதி அளிப்பதே வறுமையை ஒழிக்கும் மருந்தாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். உற்பத்தித் துறை, சிறுதொழில் துறை மற்றும் சேவைத் துறை ஆகியவற்றில் இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தொழில்நுட்பத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளாகவும் அவை இருக்கும். இதற்கு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான சாதகமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இது தவிர, பெரிய நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்தப் பணிகளில் இளைடர்களை நியமிக்கத் தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்யும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் இணக்கமான தொழில் கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்.
42. ஊழல் ஒழிப்பு
காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு பல்வேறு ஊழல் புகார்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஊழல்களுக்கு முக்கிய காரணமாக விளங்குவது ஆட்சியில் வெளிப்படைத் தன்மை இல்லாதது தான். நாட்டின் சொத்துக்கள், கனிம வளங்கள் ஆகியவை குறைந்த விலையில் தனியாருக்கு வழங்கப்படாமல், பொது ஏலத்தின் மூலம், அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையிலும், அதன் மூலம் மக்கள் பயனடையும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் ஊழல் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்ற சழ்நிலை உருவாகும். இத்தகைய ஊழலற்ற அரசு மத்தியில் அமைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உத்தரவாதம் அளிக்கிறது.
43. செயல்படும் மத்திய அரசு
கடந்த பத்து ஆண்டுகளாக ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகள் எதையும் எடுக்க முடியாத நிலையிலேயே மத்திய அரசு இருந்தது. கொள்கை முடக்குவாதத்தால் அது பரிதவித்தது. எடுக்கப்பட்ட சில துறை சார்ந்த கொள்கை முடிவுகளில், பெரும்பாலானவை தவறானதாகவும், காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைந்தால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் திடமான கொள்கை முடிவுகளை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய திடமான முடிவுகளை எடுத்திட உறுதியான, துணிச்சலான, வலிமையான தலைமை தேவை. அத்தகைய தலைமையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment