Sunday, February 2, 2014

நெடுந்தீவுக் கடற்பரப்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 19 பேர் கைது!

Sunday, February 02, 2014
இலங்கை::தமிழக மீனவர்கள் பத்தொன்பது பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
யாழ்.தீவகம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த இரவு மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஐந்து படகுகளில் பயணித்த தமிழக மீனவர்கள் 19 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறை கடற்படை தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.
 
காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 19 பேரும் யாழ். கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யாழ். நீதிமன்ற நீதிபதி முன்பாக முற்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு வழக்கம்போன்று விளக்கமறியல் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 

 

No comments:

Post a Comment