Thursday, January 30, 2014
இலங்கை::காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடு
கள் பதிவுகளாக பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கிளிநொச்சியின் பல்வேறு இடங்களிலும் இதற்கான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்த விசாரணைகளின் அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆணைக்குழுவின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பாக நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்றதைத் தொடர்ந்தே அடுத்த கட்ட விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் அடுத்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment