Thursday, January 30, 2014

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி: கடல் தாமரை போராட்டம்: பா.ஜ., சுஷ்மா பங்கேற்பு!

Thursday, January 30, 2014
ராமேஸ்வரம்::தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ஜன. 31ல் நடைபெறவுள்ள கடல் தாமரை போராட்டத்தில், பார்லி., எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார்.
 
மத்தியபிரதேசம் போபாலில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு ஜன., 31ம் தேதி மதியம் 1 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் சுஷ்மா சுவராஜ், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 2.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இறங்குகிறார். பின், அருகில் உள்ள கலோனியர் பங்களாவுக்கு சென்று, அங்கிருந்து காரில் பாம்பன் கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் மாலை 3 மணிக்கு பங்கேற்கிறார்.
 
முன்னதாக, பாம்பனில் மதியம் 2.30 மணிக்கு கடல் தாமரை போராட்டம் துவங்கி விடுகிறது இதில் பா.ஜ., தேசிய பொது செயலாளர் முரளீதர்ராவ், மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை மாநில துணைத்தலைவர் சுப.நாகராஜன், தேசிய குழு உறுப்பினர் முரளீதரன், மாவட்ட மீனவரணி செயலாளர் டைசன் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment