Friday, January 31, 2014
இலங்கை::தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்கச்
செயலாளர் நிஷா பிஷ்வால் இன்று இலங்கைக்கு செல்கின்றார். இலங்கைக்கு
செல்லும்; பிஷ்வால், பெப்பரவரி மாதம் 2ம்த திகதி வரையில் தங்கியிருப்பார்
எனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம், குற்றச் செயல்களுக்கு தணடனை
விதிக்கப்படாமை, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து
பிஷ்வால், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என
தெரிவிக்கப்படுகிறது.
பிஷ்வால் வட மாகாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், வடமாகாணசபை
அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரையும் சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவி;க்கப்படுகிறது.
இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டதன் பி;ன்னர், பிஷ்வால்
பிரித்தானியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இந்த
விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. பிஷ்வால் ஜெனீவாவிற்கும் விஜயம்
செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment