Sunday, January 26, 2014
புதுடெல்லி::டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியேற்றினார். பின்னர் நடந்த வண்ணமிகு அணிவகுப்பை ஜனாதிபதி, பிரதமர் மன்மோகன் உள்பட முக்கிய தலைவர்கள் பார்வையிட்டனர். டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் மூலை முடுக்கெல்லாம் போலீசார் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். விழாவை முன்னிட்டு துணை ராணுவ படையினர், போலீசார் உள்பட சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை முதலே ராஜ்பாத் பகுதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மேலும் குடியரசு தின பேரணி நடைபெறும் விஜய் சவுக் முதல் செங்கோட்டை வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடியரசு தின விழா அணிவகுப்பை முன்னிட்டு டெல்லியின் மேலே விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்டிருந்தது. அப்பகுதில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பஸ் ஸ்டாப்கள் என அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ராஜ்பாத் பகுதியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கட்டிடங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் இந்தியா கேட்டில் உள்ள தியாகிகளின் நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்தாண்டு சிறப்பு விருந்தினராக ஜப்பான் நாட்டு பிரதமர் சின்ஜோ அபே கலந்து கொண்டார். அவர் மன்மோகனுடன் இணைந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். மேலும் அங்கு பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். அதற்கு முன்னதாக செங்கோட்டையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார். காலை 9.50 மணி அளவில் பிரணாப் ராஜ்பாத்துக்கு வந்தார். பின்னர் வீரதீர செயல் ஆற்றியவர்களுக்கு பிரணாப் விருதுகள் வழங்கினார். அதன்பின் நடந்த ராணுவ அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பையும் பிரணாப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி:
No comments:
Post a Comment