Monday, December 30, 2013

புலிகளின் ஆதரவு கனடிய தமிழ் எம்.பி. ராதிகா திடீர் யாழ். விஜயம்: முகாம்களை பர்வையிட்டார்!!!

Monday, December 30, 2013
இலங்கை::கனடிய புலிகளின் ஆதரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். எதிர்வரும் 4ம் தேதி வரை இலங்கையில் தங்கி நிற்கும் அவர், யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார்.

கனடிய புலிகளின் ஆதரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் rathika sitsabaiesan dance photos!!
http://ekuruvi.com/rathika-sitsabaiesan-caribana-2013

rathika sitsabaiesan pro ltte! 
http://www.youtube.com/results?search_query=rathika+sitsabaiesan+sri+lanka&sm=12

இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர், வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல பகுதிகளையும் நேரி சென்று பார்வையிட்டார். குறிப்பாக,வலி. வடக்கு பிரதேசம் மற்றும் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களை கூட்டமைப்பு சார்பு வலி. வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் நேரில் அழைத்து சென்று காண்பித்தார். நாளை முல்லைதீவிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா, நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு வந்து இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்புக்களை மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து பல பொது அமைப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சந்திப்புக்களின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் சென்று மக்களுடன் உரையாடியுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இந்த முகாமிற்கு சென்று மக்களைச் சந்தித்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment