Saturday, December 28, 2013

வரவு- செலவுத் திட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்கு பொருத்தமான பொறிமுறை செயற்திட்டம்!

Saturday, December 28, 2013
இலங்கை::உள்ளூராட்சி மன்றங்களின் வரவு- செலவுத் திட்டத்தை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் முகாமைத்துவம் செய்வதற்கு பொருத்தமான பொறிமுறை செயற்திட்டம் ஒன்றை ஆசிய மன்றம் அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் நிகழ்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத் வளவாளராகக் கலந்து கொண்டு இப்போறிமுறை செயற்திட்டம் குறித்து விரிவுரை நிகழ்த்தினார்.

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இச்செயலமர்வில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பொத்துவில், நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது இப்பிரதேச சபைகளின் வரவு- செலவுத் திட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்குரிய இணைய பொறிமுறைக்கான ஆவணங்களும் குறித்த சபைகளின் தவிசாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

No comments:

Post a Comment