Saturday, December 28, 2013

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுகுட்பட்ட செட்டிபாளைத்தில் பாதுகாப்பு அமைச்சின் வாகனம் விபத்து!

Saturday, December 28, 2013
இலங்கை::களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுகுட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் பாதுகாப்பு அமைச்சுக்கரிய வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் செட்டிபாளையம் பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
 

No comments:

Post a Comment