Sunday, December 29, 2013

கடல் தொழிலாளர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளும், காப்புறுதியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது: பணிப்பாளர் ரீ. ஜோர்ச்!

Sunday, December 29, 2013
இலங்கை::ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கடல் தொழிலாளர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளும், காப்புறுதியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கடல்தொழில் நீரியல் வள உதவிப் பணிப்பாளர் ரீ. ஜோர்ச் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1693 இயந்திரப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இவற்றில் 1223 வெளியிணை இயந்திரப்படகுகள், 360 ஆழ்கடல் இயந்திரப்படகுகள், 70 ஒருநாள் இயந்திரப்படகுகளும், என உள்ளன.
இவற்றில் இருவர் மீன்பிடிகளுக்காக செல்கின்றனர். இவர்களுக்காக உயிர்காப்பு அங்கிகள் கட்டாயமாகும். அதே நேரம் படகுக்கும் பயணிப்பவர்களுக்கும் காப்புறுதியும் கட்டாயமாகும்.

எந்தவிதமான காப்புறுதியும் இல்லாது மீன்பிடியில் ஈடுபடும் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நஸ்ரஈடு வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், நஸ்டஈடு வழங்க முடியாத நிலையும் காணப்படுகிறது. கடந்த காலங்களில் 13 பேர்வரை மீன்பிடியில் ஈடுபட்டவேளை உயிரிழந்துள்ளனர்.

மீனவர்களுக்கான காப்புறுதிகள் மேற்கொள்ளப்படும் போது, 115000 ரூபாய் இழப்பீடு மரணச்சடங்குச் செலவுடன் வழங்கப்படுகிறது. அதே நேரம் மீன்பிடிக்குச் சென்று காணாமல் போகும் மீனவர்களுக்கு அவர்கள்  வீடு திரும்பும் வரையில் மாதாந்தம் 5000 ருபாய்களும் வழங்கப்படுகின்றன.

எனவே மீனவர்கள் தமது காப்புறுதியை கட்டாயமாக மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment