Thursday, December 5, 2013

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் யாழ்ப்பாண விஜயம் குறித்து தெரியாது: இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம்!

Thursday, December 05, 2013
இலங்கை::இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் யாழ்ப்பாண விஜயம் குறித்து தெரியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது,
 
இந்திய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளமை தொடர்பில் அரசாங்கத்திற்கு இதுவரையில் அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என, மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அண்மையில் தெரிவித்திருந்தார். வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் அழைப்பிற்கு அமைய இந்திய பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். எவ்வாறெனினும், இந்திய பிரதமரின் விஜயம் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காமை துரதிஸ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை பார்வையிடும் சந்தர்ப்பத்தை தவறவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் அமர்வுகளில் பங்கேற்றிருந்தால் அனைவராலும் வரவேற்கப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிரதமர் நேரில் பார்வையிட்டிருகக்க சந்தர்ப்பம் கிட்டியிருக்கும் என பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment