Thursday, December 05, 2013
இலங்கை::இலங்கை அரசினால் முன்னெடுத்து செயற்படுத்தப்பட்டுவரும் உள்நாட்டு யுத்தத்தினால் உயிரிழந்த, காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொ
டர்பான கணக்கெடுப்பு நடவடிக்கை குறித்து பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா வரவேற்றுள்ளார்.
இச்செயற்பாடானது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யுத்தத்துக்குப் பின்னரான நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் முன்நகர்த்திச் செல்வதற்கு ஏதுவாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 30 வருட கால உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த, காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்துக்களின் சேத விபரங்கள் குறித்து தேசிய ரீதியில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம். பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சாட்சிகளால் வழங்கப்படும் சரியான தகவல்கள் பதிவு செய்யப்படும் என நாம் நம்புகின்றோம். தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கப்படுவதை நாம் வரவேற்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
நவம்பர் 28 ஆம் திகதி முதல் ஆறு மாதகாலத்துக்குள் இக்கணக்கெடுப்பை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment