Sunday, December 29, 2013
இலங்கை::இந்திய (புலி ஆதரவாளர்) ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரனின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுத்த பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன!
இந்திய ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரனின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுத்த பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன, 'இக்குற்றச்சாட்டுக்களை அவர் இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் முன்வைத்திருந்தால் வைத்தியரொருவருக்கு காண்பித்து மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை பெறப்பட்டதன் பின்னரே அவரை நாடு கடத்தியிருப்போம்' என்றார்.
'இலங்கை பாதுகாப்பு தரப்பு மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டுக்களை முன்வைக்கும் நோக்கிலேயே அவர் மேற்கண்டவாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்' என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்...
'இலங்கை பாதுகாப்பு தரப்பு மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டுக்களை முன்வைக்கும் நோக்கிலேயே அவர் மேற்கண்டவாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்' என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்...
யார் இந்த மகா. தமிழ்பிரபாகரன்?
இவர் இலங்கைக்கு செல்வது இது முதல்முறை அல்ல! இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்திற்கு பிறகு இலங்கைக்கு நேரடியாக சென்று புலித்தடம்தேடி… என்ற தலைப்பில் “ஜூனியர் விகடன்”இதழில் கட்டுரை எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
மறுபடியும் அப்படி ஒரு பயணக் கட்டுரையை எழுதும் நோக்கத்தில் தான் அதற்கான தடயங்களையும், ஆதாரங்களையும் திரட்டுவதற்கு சென்று தற்போது இலங்கை இராணுவத்திடம் சிக்கிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஆர்வம் இருக்கும் அளவிற்கு அவருக்கு சட்ட நுணுக்கம் தெரிய வில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நமது நிருபர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. மகா. தமிழ்பிரபாகரன்-னின் கீழ்க்காணும் முந்தைய நேர்காணலும், அவரது படைப்புகளுமே இதற்கு சான்றாக திகழ்கிறது.
No comments:
Post a Comment