Sunday, December 01, 2013
ஜம்மு::காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை
சரியானதல்ல. காஷ்மீரை, ஒரு சூப்பர் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.,வின்
திட்டம் என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறினார்.
காஷ்மீர் மாநிலத்தில்
முதன் முறையாக பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரசாரம் செய்தார். ஜம்முவில்
நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தற்போது மத்தியில் ஆளும் அரசு தூங்கிக்
கொண்டிருக்கிறது. இதே ஆட்சி 2014ம் ஆண்டிலும் தேவையா? இந்தியர்களான சப்ரத்சி்ங
மற்றும் சமைல்சிங் ஆகியாரை கொன்றது பாகிஸ்தான் அரசு. ஆனால், பிரதமர் மன்மோகன்சிங்
அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய அரசு குரல்
கொடுத்திருந்தால், சப்ரத்சிங்கை பாகிஸ்தான் கொன்று இருக்காது. இவ்வாறு மோடி
பேசினார்.
No comments:
Post a Comment