சென்னை::சினிமா டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு 'யூ' டியூப்பில் வெளியாகி இருக்கிறது.
அதில்
இந்து கடவுள்களான சிவன், விநாயகர் ஆகியோரை பற்றி அவதூறாக சீமான் பேசி
இருப்பதாக கூறி இந்து அமைப்பினர் இன்று டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரு புகார்
மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–
சீமான் பேச்சில் இந்துக்கள்
கல்லை கடவுளாக வழிபட்டு பின்னர் அந்த கல்தான் நம்மை படைத்ததாக
கூறுகின்றனர். இந்து கடவுள் எதைத்தான் படைத்தார்.
அவருக்கு படைக்கப்படுகின்ற கொழுக்கட்டையையாவது படைத்தாரா என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இந்திய தண்டனை சட்டம் 153ஏ, 295ஏ மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment