Thursday, December 26, 2013

காவத்தமுனையில் ஸ்ரீ.சு.கட்சியினால் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்!

Thursday, December 26, 2013
இலங்கை::ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் திட்டத்தில் கல்குடாத் தொகுதியில் காவத்தமுனைக் கிராமத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

ஓட்டமாவடி முதலாம் வட்டார ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் பி.நளீர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்
கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் சமூக சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான எஸ்.ஏ.றபீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment