Wednesday, December 4, 2013

டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு!

Wednesday, December 04, 2013
சென்னை::டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதனை  முன்னிட்டு சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்வது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.

சென்னையின் முக்கிய இடங்களில் நேற்று இரவு முதல் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தினார்.

மேலும் பாபர் மசூதி இடிப்பு தினமாக வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடத்த பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் அறிவித்துள்ளதால் சென்னை நகரில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை நகரில் உள்ள விடுதிகளில் புதிதாக தங்கியிருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment