Tuesday, December 3, 2013

வட பகு­தியில் 1073.91 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவில் கண்­ணி­வெ­டிகள் அகற்றல் மாவட்ட செய­ல­கங்­களின் புள்­ளி ­வி­பரம்!

Tuesday, December 03, 2013
இலங்கை::வடக்கில் இதுவரை 1073,91 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது .
 
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , வவுனியா , மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளிலேயே குறித்த 1073,93 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளும் வெடிக்காத வெடிபொருட்களும் அகற்றப்பட்டுள்ளன . அதனடிப்படையில் யாழ் . மாவட்டத்தில் 387,15 சதுர கிலோமீற்றரிலும் கிளிநொச்சியில் 262 சதுர கிலோமீற்றரிலும் முல்லைத்தீவில் 127,04 சதுர கிலோமீற்றரிலும் மன்னாரில் 208,29 சதுர கிலோமீற்றரிலும் வவுனியாவில் 89,43 சதுர கிலோமீற்றரிலும் கண்ணிவெடிகளும் வெடிக்காத வெடிபொருட்களும் அகற்றப்பட்டுள்ளன .
 
அதே – வேளை , யாழ் . மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் இதுவரை 54,07 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக துறைசார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர் .
 
கிளிநொச்சி மாவட்டத்தில் 12.34 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முல்லைத்தீவில் 19.15 சதுர கிலோமீற்றர் பரப்பளவிலும் மன்னாரில் 16.57 சதுர கிலோமீற்றர் பரப்பளவிலும் வவுனியாவில் 5.99 சதுர கிலோமீற்றர் பரப்பளவிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .
 
இதேவேளை , தற்போது வடக்கில் பல இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment