Friday, December 27, 2013
இலங்கை::வெற்றிலைக் கேணியிலுள்ள 55 ஆம் படைப்பிரிவின் தலைமையகத்தினால் அதன் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து சில நாட்களாக இடம்பெற்ற இக் கொண்டாட்டத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள், பல்லின சமய நிகழ்ச்சிகள், மரநடுகை மற்றும் குடியுரிமைசார் செயற்பாடுகள் இடம்பெற்றன.
இதன்போது இப்படைப்பிரிவின் கீழுள்ள 165 படைவீரர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் பெரியவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. நித்தியவெட்டி மற்றும் கெவில் பிரதேச மக்களுக்குக்காக இப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அஜித் விஜேசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்டதுடன் சிங்கப்பூரில் வசிக்கும் திரு.நிலக்சன் பெரேரா தம்பதிகளினால் ரூபா 40,000க்கும் மேற்பட்ட அன்பளிப்புக்கள் வழங்கப்ட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்பளிப்புக்களை கையளிக்கும் நிகழ்வு கட்டைக்காடு அரசினர் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இவ்வைபவத்துக்கு பிரிகேடியர் அஜித் விஜேசிங்க, திரு.நிலக்சன் பெரேரா மற்றும் அவரது குடும்பத்தினர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment