Thursday, December 05, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிரான தனது புதிய ஆவணப்படத்தை உருவாக்கும் பணிகளை புலிகளின் ஆதரவு சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை::இலங்கைக்கு எதிரான தனது புதிய ஆவணப்படத்தை உருவாக்கும் பணிகளை புலிகளின் ஆதரவு சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் வெளியிடும் நோக்கில் அவர் இந்த ஆவணப்படத்தை உருவாக்கி வருகிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளன.
பிரித்தானியா இதில் முதன்மை நாடாக இருந்து செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பின்னணியிலேயே கெலும் மக்ரே இலங்கைக்கு எதிரான புதிய ஆவணப்படத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இரண்டு ஆவணப்படங்களை உருவாக்கியிருந்தார். இலங்கையின் கொலைக்களம், போர் தவிர்ப்பு வலயம் உருவாக்கியிருந்தார்.

No comments:
Post a Comment