Wednesday, December 4, 2013

புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரின் காவல் நீட்டிப்பு!

Wednesday, December 04, 2013
இலங்கை::புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரின் காவலை டிசம்பர் 17 வரை நீட்டித்து பல்லாகம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டை பட்டினம் பகுதியை சேர்ந்த குமரேசன், ஆனந்த், முத்தையா, குறழரசன் உட்பட 20 மீனவர்கள் கடந்த மாதம் 20–ந்தேதி இந்திய க
டல் எல்லையான கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 20 மீனவர்களை சிறைப் பிடித்தனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 5 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
 
பின்னர் மீனவர்கள் 20 பேரையும்  காங்கேசன் துறைக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர் அங்குள்ள கோர்ட்டில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணைக்கு பிறகு டிசம்பர் 3–ந் தேதி வரை மீனவர்களை காவலில் வைக்க இலங்கை கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 20 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
சிறைக்காவல் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் 20 பேரும் இலங்கை கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களின் குடும்பத்தினர் இருந்தனர்.
 
ஆனால் அவர்களுக்கு வருகிற 17–ந்தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து  ஊர்க்காவல் படை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
அவர்களது காவல் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment