Wednesday, December 4, 2013

மூதூரில் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரான்ஸ் நிறுவனம் சுமத்தியுள்ள குற்றம் ஏற்றுக்கொள்ள செயல் அல்ல: இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய!

Wednesday, December 04, 2013
இலங்கை::மூதூரில் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரான்ஸ் நிறுவனம் சுமத்தியுள்ள குற்றம் ஏற்றுக்கொள்ள  செயல் அல்ல: இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய.
 
இலங்கை அரசாங்கத்துடன், எவ்வித தகவல்களையும் பகிர்ந்து கொள்ளாமல் இந்த குற்றச்சாட்டை பிரான்ஸ் நிறுவனம் சுமத்தியுள்ளமையானது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல என்று இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
குறித்த பிரான்ஸ் நிறுவனம் கொலை குற்றச்சாட்டை சுமத்துவதற்கு முன்னர் அதற்கான ஆதாரங்கள் இருக்குமானால் அதனை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து இலங்கையில் உள்ள நீதியின் அடிப்படையில் செயற்பட்டிருக்க முடியும்.
 
இதனை செய்யாது பகிரங்கமாக கொலை குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment