Thursday, November 28, 2013

யாழ்ப்பாணம், உதயன் விருந்தினர் விடுதியில் இருந்த வ. மு.விக்னேஸ்வரனின் உருவப் பதாகை கிழித்து தீவைப்பு!

Thursday, November 28, 2013
இலங்கை::யாழ்ப்பாணம், உதயன் விருந்தினர் விடுதியில் இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் உருவப் பதாகை  கிழித்து செய்யப்பட்டதுடன் தீயும் மூட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை தேர்தலின் போது சீ.வி.விக்னேஸ்வரனின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக நாவலர் வீதியில் உள்ள உதயன் விருந்தினர் விடுதி பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த விக்னேஸ்வரனின் உருவப்பதாகை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்கு தீயும் மூட்டிவிட்டு  சென்றுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் உதயன் பணிமனையில் மாவீரர் தின நிகழ்வுகள் மரம் நாட்டு வைபவம், இரத்ததானம் என்பன இடம்பெற்றதுடன் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மரமும் நாட்டியிருந்தார். இந்தநிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment