Thursday, November 28, 2013
இலங்கை::புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டங்கட்டியுள்ளது .
இது கட்சியின் நிலைப்பாடு அல்லவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் கூறியுள்ளார் .
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் அறிக்கை பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனிடம் கேட்டபோது , 21 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் நடந்த மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கட்சி வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் தேசியப் பிரச்சினை தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதென கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் கூறினார் .
பிரபாகரனின் பிறந்ததினமான நவம்பர் மாதம் 26 இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் உணர்ச்சி வசப்பட்டிருக்கலாம் . அவர் ஓர் உணர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் . நாம் இந்தப் பாணியில் எமது தேர்தல் பிரசாரத்தை செய்யவில்லை .
ஸ்ரீதரன் கூட இவ்வகையில் பிரசாரம் செய்யவில்லை . எமக்கு முன்னரே தெரிந்திருந்தால் நாம் இதை அனுமதித்திருக்க மாட்டோம் ' என கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் கூறினார் .
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல . நாம் இதில் தெளிவாக உள்ளோம் ' என கூறினார் சம்பந்தன்.
No comments:
Post a Comment