Friday, November 1, 2013

உலக நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்பட வேண்டும்: அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா கில்லார்ட்!

Friday, November 01, 2013
மெல்பேர்ன்::உலக நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்பட வேண்டுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் கோரியுள்ளது. 30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் இலங்கையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

தாமும், பிரதமர் டோனி அப்போடும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை எதிர்நோக்கி வரும் சவால்களுக்கு தீர்வு வழங்க பிராந்திய வலய நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் ஏனைய உலக நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
  
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment