Friday, November 01, 2013
இலங்கை::சட்டவிரோதமாக ஒருதொகை தங்கம் கடத்திச்செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து 489 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
சுமார் 24 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான பெண், தனது பயணப் பொதியில் சூட்சுமமாக மறைத்து தங்கத்தை இந்தியாவின் கேரளாவிற்கு கடத்திச்செல்ல முற்பட்டபோது விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment