Thursday, November 28, 2013
இலங்கை::அழிந்துபோன புலிப் பயங்கரவாதிகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன நேற்று சபையில் குற்றம் சாட்டினார் .
இலங்கை::அழிந்துபோன புலிப் பயங்கரவாதிகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன நேற்று சபையில் குற்றம் சாட்டினார் .
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதை தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் தகர்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மாநாட்டை வெற்றிகரமாகநடத்தி முடித்து நாட்டுக்கு கெளரவத்தை பெற்றுக் கொடுத்தாரென்றும் அமைச்சர் தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார் .
அரசின் உற்பத்தித் துறையில் நெருக்கடி உணவு நெருக்கடி அரசியல் பிரச்சினைகளைப் பயன்படுத்தி புலிகள் வெற்றி பெறுவார்கள் என நினைத்தவர்களின் கனவுக் கோட்டைகள் அனைத்தும் வீழ்ச்சி கண்டு புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் . இன்று அழிந்துபோன புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன .
பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு எத்தனையோ தடைகள் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன . அனைத்தும் தகர்க்கப்பட்டு மாநாட்டை நடத்திக் காட்டிய ஜனாதிபதி புதிய செய்தியை உலகிற்கு வழங்கினார் .
இதன் மூலம் இலங்கைக்கு உலகளவில் கெளரவத்தை நன்மதிப்பை பெற்றுக் கொடுத்துள்ளார் .
அத்தோடு உலக நாடுகள் எமது நாட்டின் உண்மை நிலைமையை புரிந்து கொண்டுள்ளன . இம்மாநாடு நடத்தப்பட்ட போதும் இதற்கெதிராக சதிகள் மேற்கொள்ளப்பட்டன . அவ்வாறான அரசியல் சூழ்ச்சிகளும் தோல்வியைத் தழுவின .
நாட்டுக்குள் தலை தூக்கியிருந்த சில பிரச்சினைகளைப் பயன்படுத்தி பயங்கரவாத விடுதலைப் புலிகளை வெற்றி பெறச் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டன .
அனைத்து முயற்சிகளும் தகர்க்கப்பட்டு புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர் . ஐ.தே. கட்சியின் தூண்களான காமினி திசாநாயக்க லலித் அத்துலத் முதலி ரஞ்சன் விஜேரத்ன ஆர் . பிரேமதாச முதலியோரை புலிகளே கொலை செய்தனர் .
ஆனால் இந்த வரலாற்றை தெரியாதவர்களும் ஐ.தே. கட்சியில் இருக்கின்றனர் என்பது கவலையளிக்கும் விடயமாகும் . இவ்வாறான புலிகளை மீண்டும் உயிர்பெறச் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிகளை முன்னெடுக்கின்றன .
பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும் அபிவிருத்திக்காகவும் தனியான வங்கி முறைமையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தியுள்ளார் .
எமது ஜனாதிபதியை முன்னுதாரணமாகக் கொண்டு இந்திய அரசும் பெண்களுக்கென தனியான வங்கி முறைமையை ஆரம்பித்துள்ளது . இதனை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை . எனவே இம் முறைமையை அவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் . உலகப் பொருளாதாரத்தில் இன்று ஆசியா முன்னேற்றம் கண்டு வருகின்றது .
இந்தியாவும் சீனாவும் பாரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளன . அந்தப் பட்டியலில் இலங்கை இடத்தைப் பிடித்துள்ளது . அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் பொருளாதாரத்தில் பின்னடைவைக் கண்டுள்ளன .
எனவ ஆசிய பொருளாதார வளர்ச்சியை எவராலும் தடுத்து விட முடியாது . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கம் வடக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்திகள் தொடர்பாக பேசுவதில்லை .
வட மாகாணசபையை கூட்டமைப்பினர் கைப்பற்றினாலும் அரசாங்கம் அங்கு மேற்கொள்ளும் அபிவிருத்திகளை நிறுத்தவில்லை . எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு 21 பில்லியன் செலவில் இரணைமடுக் குளப் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . இதன் மூலம் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க முடியும் .
No comments:
Post a Comment