Thursday, November 28, 2013
இலங்கை::மன்னார் முருங்கன் பகுதியில் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 72 மணித்தியாலம் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில் நேற்று புதன் கிழமை புலிகளின் மாவீரர் தினம் என எழுதிக்கொண்டிருந்த
அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இராணுவத்தினர் கைது செய்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
முருங்கன் பொலிஸார் விசாரனைகளின் பின் குறித்த மூவரையும் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
குறித்த மூன்று பேரும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும்,இன முரண்பாட்டிற்கு வழியமைக்கும் வகையிலும் முருங்கன் பகுதியில் மாவீரர் தினம் என எழுதியதாக கூறி இவர்களை மன்றில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது மன்னார் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் குறித்த 3 சந்தேக நபர்களையும் தங்களுடைய தடுப்பில் வைத்து 72 மணித்தியாலங்கள் மேலதிக விசாரனைக்கு உற்படுத்த வேண்டும் என மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ வின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த 3 நபர்களையும் எதிர் வரும் ஞாயிற்றுக்கிமை வரை 72 மணித்தியாலங்கள் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள பதில் நீதவான் அனுமதி வழங்கினார்.
குறித்த மூவரையும் மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துமாறும் பதில் நீதவான் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மூன்று சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு,எஸ்.வினோதன் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் புலிகளின் மாவீரர் தினம் அனுஸ்டித்த மூவர் கைது : யாழ்.பல்கலையக் கழகத்திலும் புலிகளின் மாவீரர்களுக்கு அஞ்சலி!!!
மன்னார், முருங்கன் பிரதேசத்தில் மாவீரர் தினம் அனுஸ்டித்த மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மற்றும் இராணுவ அறிவுறுத்தலுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் மாவீரர் தினம் அனுஸ்டித்தமையின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
புலிகளின் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி மேற்கொள்வது சட்டவிரோத செயல் என பொலிஸார் அறிவித்தல் விடுத்தனர். இந்நிலையிலும் வடக்கு மற்றும் கிழக்கில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் காலையும் மாலையும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக சூழலில் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்துடன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் வைத்தியசாலையின் புதிய கட்டடத்திலும் சுடர் ஏற்றப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த இராணுவத்தினர் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று தீபங்களை அணைத்து அவற்றை அப்புறப்பட்டுத்தியுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் நேற்று இரவு மாவீரர் தின சுவரொட்டிகள் பல ஓட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ் சுவரொட்டிகள் உடனடியாக பாதுகாப்பு பிரிவினரால் அகற்றப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment