Tuesday, October 1, 2013

கனேடிய அரசாங்கம், நவநீதம் பிள்ளையை நியூயோர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் கூட்டத்திற்கு வரவழைக்க தீட்டிய திட்டம் அதன் ஏனைய உறுப்புரிமை நாடுகளின் கடும் எதிர்ப்பினால் முறியடிப்பு!

Tuesday, October 01, 2013
இலங்கை::கனேடிய அரசாங்கம், மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையை நியூயோர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் கூட்டத்திற்கு வரவழைக்க தீட்டிய திட்டம் அதன் ஏனைய உறுப்புரிமை நாடுகளின் கடும் எதிர்ப்பினால் தோற்கடிக்கப்பட்டி ருப்பதாக தெரியவருகிறது.
 
நிவ்யோர்க்கில் கடந்த சனிக்கிழமை பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் குறித்து உரையாற்றும்
முகமாக மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையை வரவழைக்குமுகமாக நிகழ்ச்சி நிரலில் மாற்றங்களை ஏற்படுத்த கனேடிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அது சாதகமாக அமையவில்லை.
 
கனேடிய அரசாங்கத்தின் குறித்த முயற்சிக்கு பொதுநலவாய அமைப்பின் ஏனைய அங்கத்துவ நாடுகள் கடும் ஆட்சேபனையை தெரிவித்தமையையடுத்தே இந்த முயற்சி பலித மாகாமல் சென்றுள்ளது.
பொதுநலவாய உச்சி மாநாடு நடைபெறும் இடத்தினை மாற்றுவதற்கு கனடா முயற்சித்திருந்த நிலையிலும் அதன் ஏனைய அங்கத்துவ நாடுகள் தமது அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஏற்றுக் கொள்ளவுள்ளமை தெரிந்ததே.
 
 

No comments:

Post a Comment