இலங்கை::இலங்கை மனித உரிமைகளின் பொறுப்பு கூறல் தொடர்பான மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதன் பிள்ளை வழங்கிய காலக்கேட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் திட்டபொறிமுறையினை பின்பற்றி செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மாநாட்டு அமர்வுகளின் போது, இலங்கை மனித உரிமை தொடர்பிலான முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த மீளாய்வு அறிக்கை குறிப்பிடத்தக்களவு தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் கருணாதிலக்க அமுணுகம குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளின் முன்னேற்றம் குறித்து தெளிவுப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளர் நவனீதன்பிள்ளை கடந்த மனித உரிமை பேரவை அமர்வுகளின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மனித உரிமைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க இலங்கை அரசாங்கம் தவறும் பட்சத்தில், சர்வதேச விசாரணைகளை நடாத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment